ஊழியர்களுக்கு அதிர்ச்சி!! மாநில அரசின் முக்கிய முடிவு: இந்த பலன்கள் கிடைக்கும்

Employees Benefit News : ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில், மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இப்போது ஊழியர்களுக்கு ஆசிரியராக வாய்ப்பு வழங்கப்படும். அந்தவகையில் இதற்கான கொள்கை வகுக்க கல்வித்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்காம் வகுப்பு பணியாளர்களுக்கு ஆசிரியர்களாகும் வாய்ப்பு கிடைக்கும் இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அடிப்படைக் கல்விக் கவுன்சில், மேல்நிலைப் பள்ளிகளில் இறந்த சார்பு ஒதுக்கீட்டின் கீழ் உயர் தகுதி வாய்ந்த நான்காம் … Read more

மோடி குறித்து சர்ச்சை கருத்து ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சூரத்: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர்? என்று பேசியதாக … Read more

ஐஐஎம் மாணவருக்கு ரூ.1.14 கோடி சம்பளம்

இந்தூர்: மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஐஐஎம் மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தூர் ஐஐஎம்- மையத்தில் படித்த மாணவருக்கு, ஒரு நிறுவனம் உள்நாட்டில் ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது. எங்கள் மையத்தில் இந்தாண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுதான். கடந்தாண்டு ஒரு மாணவனுக்கு அதிகபட்சமாக வழங்கப்பட்ட சம்பளம் ரூ.49 லட்சம். இந்தாண்டில் ரூ.65 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது. இந்தாண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 160-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் … Read more

Video: வீட்டின் மொட்டை மாடியில் விமானம் மோதல்… விபத்தின் நேரடி காட்சிகள் – இருவர் படுகாயம்!

Jharkhand Plane Accident Video: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், உள்ளூர் சுற்றுலாவுக்கு பயன்படுத்துப்படும் சிறிய ரக விமானம், புறப்பட்டு வானில் பறந்த சிறிது நேரத்தில் குடியிருப்பு கட்டடத்தில் மோதியதில் விமானி மற்றும் 14 வயது பயணி ஆகியோர் காயமடைந்தனர்.  இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்பக் … Read more

வாரணாசியில் ரூ.1,780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று அவர் உரை நிகழ்த்துகிறார். காச நோயை ஒழித்துக் கட்டிய மாநில அரசுகளுக்கு பாராட்டும் விருதுகளையும் மோடி அப்போது வழங்க உள்ளார். பகல் 12 மணியளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டியும் புதிய திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் … Read more

சிவசேனாவுக்கு புதிய நாடாளுமன்ற தலைவர் தேர்வு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மாநிலங்களவை எம்பி.யாக இருக்கும் சிவசேனாவை (உத்தவ்) சேர்ந்த சஞ்சய் ராவத் அக்கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், அம்மாநில முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத், சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற தலைவராக இருந்த சஞ்சய் ராவத்தை நீக்கி விட்டு, மக்களவை எம்பி. கஜானன் கிர்திகரை தலைவராக நியமித்துள்ளார்.  இது குறித்து ஷிண்டே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கருக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

“பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு மாநிலங்களவையில் எப்படி அனுமதியளிப்பது?”- திருச்சி சிவா

அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புக் கொள்ளாத நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை மாநிலங்களவையில் நடத்தக்கூடாது’ என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், ‘பட்ஜெட் ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதங்களை நடத்த அவகாசம் இல்லை. அந்த ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல்களை விரைவாக அளிக்க வேண்டும்’ என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள … Read more

கர்நாடக தேர்தலில் பாஜகவை சமாளிக்க காங்கிரஸ் புதிய வியூகம் – சிறுபான்மையின வேட்பாளர் எண்ணிக்கை குறைப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் போட்டியை சமாளித்து பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் புதிய வியூகத்தை வகுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கியுள்ள நிலை யில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, … Read more

ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை- மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள். மூத்த தலைவர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி விஜய் சதுக்கம் பகுதியில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி … Read more

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு

லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் கைபர், பக்துங்க்வா மாகாணங்களில் ஆட்சி நடத்தி வந்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் நோக்கத்தில் கடந்த ஜனவரியில் ஆட்சியை கலைத்தது. இதனால், அங்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய சட்டம்-ஒழுங்கு, அரசியல் சூழல், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்தலை 5 மாதம் ஒத்திவைத்து, வரும் அக்டோபர் … Read more