புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.6,500-ஆக உயர்வு: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 6,500 ரூபாயாக உயர்த்திய கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.ஏற்கெனவே மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்த நிலையில் ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் … Read more

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் – மெகபூபா முஃப்தி

ஸ்ரீநகர்: “வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம். ஆனால் அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை” என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி முகாமில் விரிசல்களை … Read more

‘பயமா..ராகுல் காந்திக்கா.?’ – பிரியங்கா காந்தி ரியாக்சன்; பாஜகவை பொளந்த கெஜ்ரிவால்.!

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தான் தேசிய அளவில் ஹாட் டாபிக். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ எனக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் … Read more

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமித்ஷாவுடன் ஆளுநர் சந்தித்துள்ளார்.

‘2 ஆண்டு சிறை; 1 மாதம் ஜாமீன்…’ நீதிமன்ற தீர்ப்பும், ராகுல் காந்தியின் எதிர்வினையும்!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிராக, சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பின்னர் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா … Read more

“பஞ்சாப் போலீஸார் கூறும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது” – அம்ரித்பால் சிங்  தப்பிச் சென்றதில் மாநில காங்கிரஸ் சந்தேகம்

சண்டிகர்: பஞ்சாபில் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில், தீவிரவாத குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் கடந்த 5 நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிச் சென்ற பைக் தாராபூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் தேடுவதை அறிந்த அம்ரித்பால் சிங் கடந்த சனிக் கிழமை மாலை குருத்வாரா ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர் பைக் ஒன்றில் மாறு வேடத்தில் தப்பிச் சென்றுள்ளார். அவரை விரட்டிச் சென்ற போலீஸார் … Read more

ஒரே ஒரு மெசேஜ் தான், 7 லட்சம் அபேஸ்: மும்பையில் மோசடி மன்னர்கள் கைவரிசை

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்திய பெண்ணுக்கு வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நமக்கு பல வழிகளில் உதவும் தொழில்நுட்பத்தில் உள்ள விபரீதமான பக்கவிளைவுகளை மீண்டும் ஒரு முறை தோலுறித்துக் காட்டியுள்ளது.  மும்பை அந்தேறி பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணின் கணவரது செல்போன் எண்ணுக்கு மின்சார கட்டணம் செலுத்தும் படி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ‘நீங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் உங்கள் மின் … Read more

இந்தியாவில் விரைவில் 6ஜி தொலை தொடர்பு சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு!!

டெல்லி: இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்க கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில், பல்வேறு துறை அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தரநிர்ணய … Read more

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் … Read more

நள்ளிரவு 2 மணிக்கு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீடு.. அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் பலி..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகி பேட்டையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு வீட்டில் குடும்பத்தினர் பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு படுத்துத் தூங்கிய நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேரை … Read more