டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு – சிசோடியாவின் காவல் ஏப். 5 வரை நீட்டிப்பு

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல்நடந்துள்ளதாகக் கூறி டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்தமாதம் விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும் அவரை சிபிஐ காவலில் வைத்து மார்ச் 4-ம் தேதி வரை விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பின்னர் … Read more

அதானி குழும முறைகேட்டைத் தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் : ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதிரடி

வாஷிங்டன் : அதானி குழுமம் போலி நிறுவனங்களை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் அம்பலப்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் கவுதம் அதானி போலி நிறுவனங்கள் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் கூறியது இந்தியாவில் புயலை கிளப்பியது. கரீபிய நாடுகள், மொரிஷியஸ் , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் … Read more

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது இடங்களில் கட்டாய முகக்கவசம்

கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ”புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொற்றை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 … Read more

தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஏற்றுமதியில் இந்தியா பெரிய நாடாக உருவெடுக்கிறது : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

“இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தும் நாடாக மட்டுமே இருந் தது. ஆனால், இப்போது அந்தத் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் உலகின் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய அலுவலகம் மற்றும் ஆய்வு மையத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது: 5ஜி தொழில்நுட்பத்தை மிக வேகமாக பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. 125 நகரங்களில் … Read more

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை; 30 நாட்கள் டைம்- சூரத் நீதிமன்றம் அதிரடி!

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ எனக் கேள்வி எழுப்பினார். இது பாஜகவினர் மிகுந்த கோபமடைய செய்தது. பிரதமர் மோடிக்கு களங்கம் குறிப்பாக பிரதமர் மோடிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டினர். உடனே ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் … Read more

உண்மையே கடவுள்: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: உண்மையே கடவுள் என்ற காந்தியின் கூற்றை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ‘உண்மையே கடவுள்’ என டிவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்

‘Call Before u Dig’ – மோடி அறிமுகப்படுத்திய செயலியின் பயன் என்ன?

நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்களுக்கும், நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையில் ‘Call Before u Dig’ (தோண்டும் முன் அழைக்கவும்) என்ற செயலியை புதன்கிழமை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால் குழி பறிக்கும்போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்கள் பொருட்கள் சேதமடைவதை தடுக்க முடியும். இந்த செயலின் பயன்பாடுகள் என்னென்ன? ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் போன்ற நிலத்தடி சொத்துக்கள் சேதமடைவதை தடுக்க Call Before u Dig (CBuD) … Read more

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை! குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு

Rahul Gandhi Convicted: ராகுல் காந்திக்கு இப்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது “மோடி” என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியது தொடர்பாக பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற ஒரே பெயர்? தேர்தல் பேரணியில் பேசும் போது “ஏன் எல்லா … Read more

பிரதமர் பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!

ராகுல் காந்தி குற்றவாளி – சூரத் நீதிமன்றம் தீர்ப்பு ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை பிரதமர் பெயர் குறித்து அவதூறு – ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி ஜாமீன் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பிரதமரின் பெயரை குறிப்பிட்டு ராகுல் … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.