சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது – அமித் ஷா

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குஜராத் சென்றுள்ள மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் அமித் ஷா, காந்திநகரில் நடைபெற்ற 49-வது பால் தொழில் மாநாட்டில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 1970 முதல் 2022 வரை இந்தியாவின் மக்கள்தொகை 4 மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் … Read more

சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு

டெல்லி: சுதந்திரத்திற்குப் பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாட்டில் பால் பதப்படுத்தும் திறன் நாள் ஒன்றுக்கு சுமார் 126 மில்லியன் லிட்டராக உள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பால்துறையின் பங்களிப்பு 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது என தெரிவித்திருக்கிறார்.

லண்டன் பேச்சு பற்றி ராகுலை விளக்கம் அளிக்க விடாமல் நாடாளுமன்றத்தில் பாஜ கடும் அமளி: 5வது நாளாக இரு அவைகளும் முடங்கின

புதுடெல்லி: லண்டன் பேச்சு குறித்த சர்ச்சைகளுக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க ராகுல் காந்தி முன்வந்த போதிலும், அவரை பேச விடாமல் பாஜ எம்பிக்கள் கடும் அமளி செய்ததால், தொடர்ந்து 5வது நாளாக இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், லண்டனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பேசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக … Read more

தோண்ட தோண்ட தங்கம்…படையெடுக்கும் மக்கள்..!!

மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் பகுதியில் உள்ள முராருய் 1வது பிளாக்கின், பார்கண்டியின் ஒடிசா-வங்காள-ஜார்கண்ட் எல்லையில் ஓடும் நதியான பான்ஸ்லோய் ஆற்றங்கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தங்க ஆபரணங்களை முதன்முதலில் பார்த்து எடுத்துள்ளார். மேலும் சில இடங்களை தேடும் போது அங்கும் தங்க நகைகள் கிடைத்துள்ளது. நதிக்கரையில் தங்கம் கிடைக்கும் செய்தி காட்டுத்தீ போல முழு கிராமத்திற்கும் பரவ பார்கண்டி கிராம மக்கள் ஆற்றின் கரையில் குவிந்தனர். தங்கத்தைத் தேடி, சிலர் தங்கள் கைகளாலும், சிலர் … Read more

குவியும் பாராட்டுக்கள்..!! ஆம்புலன்ஸ்க்கு வழி ஒதுக்கித் தரும் பைக் எஸ்கார்ட் சேவை!

போக்குவரத்து நெரிசல் காரணமாக, சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போகலாம். இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. அத்தகைய நோயாளிகளுக்கு உதவ, பெங்களூரின் வடகிழக்கு மண்டலத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணிபுரியும் 27 வயது இளைஞரான ஸ்ரீ ராம் பிஷ்னோய், ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பைக் எஸ்கார்ட் எனும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார். இப்போது தனி ஒருவராகத் தனது பைக்-எஸ்கார்ட் சேவையை வழங்கும் பிஷ்னோய், விரைவில் அரசு சாரா நிறுவனத்தை (என்ஜிஓ) அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார். … Read more

எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் நாடாளுமன்ற முடக்கம் தீர்க்கப்படும்: அமித் ஷா

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் நிலவிவரும் முடக்கத்திற்கு தீர்வு ஏற்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஊடக நிறுவன நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் பேசிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தது, “அரசியலுக்கு அப்பாற்பட்டு சில பிரச்சினைகள் உள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட, அந்நிய மண்ணில் உள்நாட்டு பிரச்சினைகளை விவாதிக்க மறுத்திருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: இரண்டு தரப்பும் நாடாளுமன்ற சபாநாயகர் … Read more

5,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு

புதுடெல்லி:  நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 769 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 109 நாட்களுக்கு பிறகு, சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கை 5,026 ஆக உள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, இமாச்சல். உத்தர பிரதேசத்தில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகி உள்ளனர். குணமடைந்து வருவோரின் சதவீதம் 98.80 ஆக உள்ளது. மேலும், இதுவரை 220.62 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவுக்கு மேலும் 5 நாள் காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி தனியார் நிறுவனங்களுக்கு 850 மதுபான கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை … Read more

மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு

India Covid Cases: மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 126 நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று இந்தியாவில் ஒற்றை நாளில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 800 ஐத் தாண்டியுள்ளது. அதே நேரத்தில் செயலில் உள்ள எண்ணிக்கை 5,389 ஆக உயர்ந்துள்ளது. 843 புதிய நோய்த்தொற்றுகளுடன், நாட்டின் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,94,349) அதிகரித்துள்ளது. நான்கு பேர் பலியானதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்தது. இந்த தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது.  ஜார்கண்ட் … Read more

காக்கிநாடாவில் பயங்கரம்… மோட்டார் வாகன துணை ஆய்வாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி…!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வாகன ஆவணங்களை சரிபார்ப்பதற்காக கேட்ட மோட்டார் வாகன துணை ஆய்வாளரை கத்தியால் வெட்டிய இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜில்லா பரிசத் சென்டர் பகுதியில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் இளநீர் விற்பனை செய்துவரும் வெங்கடதுர்க பிரசாத்திடம், மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னராவ் ஆவணங்களை கேட்டதாக கூறப்படும் நிலையில், அவர் இளநீர் வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். Source link