Live In Relationship: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் அட்ராசிட்டி! அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்

அகமதாபாத்: காதல், திருமணம், திருமணம் செய்துக் கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வது, ஓரின சேர்க்கை, திருமணம் தாண்டிய உறவு என பல விஷயங்கள் இன்றும் விவாதப் பொருளாக இருக்கின்றன. அதில் லிவ்-இன் என்ற அக்ரிமெண்டின் அடிப்படையில் கணவரிடம் இருந்து காதலியை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள முயன்ற ஒருவருக்கு  குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.5,000 அபராதம் விதித்தது. குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தை அணுகி, தன்னுடன் இருக்கும் பெண்ணுடன் தான் வாழ்வதாகவும், ஆனால், அவளது விருப்பத்திற்கு மாறாக … Read more

செகந்தராபாத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து… புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி 4 பெண்கள் உட்பட 6 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில், வணிக வளாகத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தின்போது, புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி, 4 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர். செகந்தராபாத்தில் ஸ்வப்னலோக் வணிக வளாகத்தில் நேற்றிரவு திடீர் தீ விபத்து நேரிட்ட நிலையில், மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் இருளில் சிக்கிக்கொண்டனர். உதவி கேட்டு மக்கள், செல்போன் டார்ச் விளக்கை எரியவிட்டதையடுத்து, தீயணைப்புப்படையினர் அவர்களை பத்திரமாக வெளியேற்றினர். எனினும் 5ஆவது தளத்திலுள்ள அறை ஒன்றில் மயங்கிக்கிடந்த 6 பேர் மீட்கப்பட்டு, அருகிலிருந்த அரசு … Read more

கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் உயிர்தப்பிய ஒன்றிய பெண் அமைச்சர்: போதை லாரி டிரைவர் கைது

விஜயபுரா: கர்நாடகா சென்ற ஒன்றிய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி சாலை விபத்தில் காயமடைந்தார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் விஜயபுரா தேசிய நெடுஞ்சாலை-50ல் நேற்றிரவு ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை பாஜக இணையமைச்சர் அமைச்சர் நிரஞ்சன் ஜோதி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென ஒன்றிய அமைச்சரின் கார் மீது மோதியது. இச்சம்பவத்தில் அமைச்சர் மற்றும் அவரது கார் டிரைவருக்கு … Read more

பிரதமர் மோடிக்கு எதிராக சிறப்புரிமை தீர்மானம் – மாநிலங்களவையில் கே.சி.வேணுகோபால் தாக்கல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மாநிலங்களவையில் சிறப்புரிமை தீர்மானம் தாக்கல் செய்தார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அவமதிக்கும் விதமாக இழிவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டி, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வேணுகோபால் சிறப்புரிமை தீர்மானத்தினை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த … Read more

துணை ராணுவப் படையில் 10% இடஒதுக்கீடு! அக்னிவீர் பணிகளில் வயது வரம்பில் தளர்வு

நியூடெல்லி: அக்னிவீரர்களுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்க உள்துறை அமைச்சகமும் முடிவு செய்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை சட்டம் 1968ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய தொழில் பாதுகாப்பு படை சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே, முன்னாள் தீயணைப்பு வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.   BSFக்குப் பிறகு, முன்னாள் தீயணைப்பு வீரர்களுக்கு இந்த துணை ராணுவப் படையில் 10% இடஒதுக்கீடு … Read more

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% உயர்ந்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6% உயர்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வனங்களின் சூழல் தன்மையை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், தற்போதைய காலக் கட்டத்தில் புலிகள் இனம் அழிந்து வருகின்றன. புலிகள் தங்கள் இயற்கை வாழ்விடங்களில் 90% இழந்துவிட்டன. அந்த வகையில் மிக வேகமாக அழிந்து வரும் புலி இனங்களை பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,  புலிகள் … Read more

‘நான் பிரதமர் அலுவலக அதிகாரி’ – காஷ்மீரில் Z+ பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத் மோசடி நபர்!

பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி காஷ்மீரில் இசட் பிளஸ் (Z PLUS) பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் பாய் பட்டேல் என்பவர், பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக (Additional Director for strategy and campaigns) பணியாற்றுவதாகக் கூறி, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் உள்பட பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வந்ததாகத் தெரிகிறது. அந்த வகையில், கடந்த மாதம் முதல் முறையாக காஷ்மீருக்கு சென்ற அவர், … Read more

மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ் மனைவியை ‘பிளாக்மெயில்’ செய்ய முயற்சி – சட்டப்பேரவையில் தகவல்

மும்பை: பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தன் மனைவியிடம் லஞ்சம் கொடுக்கவும், பிளாக்மெயில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக சட்டப்பேரவையில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்தார். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், மும்பை மலபார் ஹில் போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில் அனிக் ஷா என்ற பெண் தனக்கு லஞ்சம் கொடுக்கவும், பிளாக்மெயில் செய்யவும் முயன்றார் என கூறப்பட்டுள்ளது. இதன் … Read more

ஹெலிகாப்டர் விபத்து – தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடலை இன்று தமிழ்நாட்டிற்கு கொண்டு வர திட்டம்

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடல், இன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர், நேற்று காலை அருணாச்சலபிரதேசத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து மண்டலா மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த லெப்டினெண்ட் ரெட்டி மற்றும் தேனி ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் ஆகிய 2 விமானிகள் உயிரிழந்தனர். மேஜர் … Read more

சினிமா உலகின் மிக உயரிய ஆஸ்கர் விருது பெற்றவர்கள் தாயகம் திரும்பினர்: பதாகைகளுடன் வரவேற்று ரசிகர்கள் வாழ்த்து..!!

டெல்லி: சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்று தாயகம் திரும்பியுள்ள ஆர்.ஆர்.ஆர். மற்றும்தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் 14 ஆண்டுகால ஆஸ்கர் தாகத்தை தீர்த்து வைத்த இரு வேறு படக்குழுவினரும், விமானம் மூலம் தாயகம் திரும்பினர். மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் தயாரிப்பாளர் குனித் மோங்காவுக்கு ரசிகர்கள் யானைகளின் படம் பதித்த பதாகைகளை பிடித்தபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது … Read more