XBB.1.16 வைரஸ்: அறிகுறிகள், அதிகரிக்கும் பரவல், விளைவுகள்… மீண்டும் கலக்கத்தில் இந்தியா!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதற்கு உதாரணம் தான் XBB.1.16 வைரஸ். இது கொரோனா XBB மாதிரியில் இருந்து புதிய வைரஸாக உருமாறி வந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவில் தான் XBB.1.16 உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சொல்லலாம். இதில் மகாராஷ்டிராவில் இருந்து உருமாறிய … Read more

ஓய்வூதிய கோரிக்கைப் போராட்டத்தால் ஸ்தம்பித்த அரசு சேவைகள்! 3 நாளாக வேலைநிறுத்தம்

மும்பை: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக மகாராஷ்டிரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது, அரசு அதிகாரிகள் பிடிவாதமாக இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றம் சாட்டும் நிலையில், போராட்டம் பல நாட்கள் தொடரும் என்றும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது.   போராட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள்  மகாராஷ்டிர மாநிலத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைக்கக் கோரி மாநில அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் மூன்றாவது நாளான இன்று, பொதுச் … Read more

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: சோனியா காந்தி, ராகுல் பங்கேற்பு

டெல்லி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் எம்.பி.க்கள் பலர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு … Read more

மீண்டும் அதிகரிக்கும் தொற்று | இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 109 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,625 … Read more

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், இந்த வாரம் முழுவதும் தொடர் அமளி ஏற்பட்டதால் ஒரு மசோதாவை கூட விவாதம் … Read more

”இந்திய மீனவர்கள் நம்ம எல்லைக்குள் வந்தா இதை செய்யுங்க”- இலங்கை அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தால், அவர்களுக்கு எதிராக கடலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என இலங்கை மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அறிவுரை வழங்கியுள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தொழிலில் பல்வேறு சிரமங்களை தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர் கதையாகவே நடைபெற்று வருகிறது. … Read more

தேசிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை

புதுடெல்லி: தேசிய கலாச்சார பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற வர்த்தகக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளை அனைத்து மாநிலங்களிலும் அமைத்து உயர்நிலை ஆய்வுகள் செய்யவும் யோசனை கூறியுள்ளது. நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனிப்பட்ட கலாச்சாரம் காணப்படுகிறது. நவீன கால மாற்றத்தால் இது மறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை காத்து, இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு புதிய யோசனை … Read more

பாதயாத்திரையின் போது ராகுல்காந்தியிடம் 2 பெண்கள் அளித்த புகார்.. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி விவரம் கேட்கும் போலீசார்..!

ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பி சில கேள்விகளை எழுப்பியுள்ளது. பாரத ஒற்றுமை பாதயாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” என்று கூறியிருந்தார். பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை ராகுலிடம் போலீசார் கேட்டுள்ளனர், இதனால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகளை தெரிவித்துள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மற்றும் அதானியின் உறவு குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளால் திணறிய மத்திய அரசு காவல்துறைக்கு பின்னால் ஒளிந்து … Read more

தெலங்கானா மாநிலம் செக்கந்திராபாத்தில் பயங்கர தீ விபத்து… 4 சிறுமிகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி…

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலத்தில் நேற்று இரவு அடுக்குமாடி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 சிறுமிகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தெலங்கானாவின் செக்கந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாற்று 8வது மாடியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ … Read more

FACTCHECK: ‘நோபல் பரிசு பெற மோடி தகுதியானவர்’ என பரிசுக்குழுவை சேர்ந்தவர் சொன்னாரா?

“பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர்; அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக இவர் இருக்கிறார்” என்று நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே கருத்து தெரிவித்திருப்பதாக ஒரு செய்தியை தமிழ்நாடு பாஜக நேற்று ஒரு பதிவிட்டிருந்தது. “பிரதமர் திரு.மோடிக்கு நோபல் பரிசு” இந்திய பிரதமர் திரு.@narendramodi அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக இவர் இருக்கிறார் – நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே … Read more