கர்நாடக தேர்தலில் ஒவைசி கட்சி போட்டி – முஸ்லிம் வாக்குகள் சிதற வாய்ப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி தங்களது கட்சி, கர்நாடக பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத் தேர்தலில் … Read more