ராகுல் காந்தியின் லண்டன் உரை; இதெல்லாம் சரி வராது- பாஜக எம்பி ஹேம மாலினி டென்ஷன்!

சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் நாடாளுமன்றம், பத்திரிகை, தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் சிலரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக விமர்சனம் முன்வைத்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக, பிரதமர் மோடி மாற்று, ஆர் எஸ் எஸ் அமைப்பு பற்றி பேசினார். எதிர்க்கட்சி தலைவர்களிடம் இந்தியாவின் நிலை குறித்து கேட்டால் உங்களுக்கே நன்றாக தெரியும் எனவும், என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாகவும் தெரிவித்தார். பெகாஸஸ் முறைகேடு பற்றி பேசிய ராகுல் காந்தி, எங்களுடைய ஆட்சி காலத்தில் … Read more

அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

டெல்லி: அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக்கப்பிரிவு அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்துவது குறித்தும் விவாதிக்க திட்டமிட்டுள்ளது.

பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் தரப்படும். பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய … Read more

இர்பான் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு கீழே போட்ட எச்சில் எலும்பில் பெப்பர் சிக்கனா ? சல்லடை போட்டு சலித்த அதிகாரிகள்..!

பிரியாணி பிரியர்கள் சாப்பிட்டு போட்ட,  சிக்கன் எலும்பை, பெப்பர் சிக்கனில் கலந்து தருவதாக வீடியோ வெளியிட்ட யூடியூப்பரின் புகாரின் பேரில், புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் உள்ள இர்பான் ரெஸ்டாராண்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்…. கண்டதையும் உண்டு மகிழும் யூடியூப்பர்களால் நெய் புரோட்டாவுக்கு பேமஸ் என்று உச்சத்துக்கு தூக்கிவிடப்பட்ட பிரபலமான உணவகம், புதுச்சேரி அடுத்த வில்லியனூர் சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள இர்பான் ரெஸ்டாரண்ட்! இன்று அதே போன்ற ஒரு யூடியூப்பரால் இர்பான் ரெஸ்டாரண்டில், கெட்ட இறைச்சி, சாப்பிட்ட … Read more

தலித் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேருக்கு ஆயுள்: குற்றவாளிகளுக்கு உதவிய 2 பெண்களுக்கும் தண்டனை

காசியாபாத்: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தலித் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 6 பேருக்கு ஹாபூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் தவுலானா கிராமத்தில் கடந்த 2007ல் நடந்த திருவிழாவின் போது வைக்கப்பட்ட கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 16 வயது தலித் சிறுமியை இரண்டு பெண்கள் அழைத்து சென்றனர். அன்றிரவு திருவிழா முடியும் நேரத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கைப்பம்பு மூலம் தண்ணீர் எடுத்து வர அந்த … Read more

குவியும் பாராட்டுகள்…! வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்..!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்பவர் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அதிவேக விரைவு ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவைகள் மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை ஒவ்வொரு இடத்திலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சோலாப்பூரில் இருந்து மும்பையில் … Read more

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வறுத்தெடுத்த பிரதமர் மோடி…!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மதம் நடைபெறுகிறது. இச்சூழலில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு சென்றார். அங்கு பெங்களூர் – மைசூர் வரையிலான 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் … Read more

8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் முதன்முறையாக 8 பெட்டிகள் கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படவுள்ளது. முதல் ரயிலை இம்மாத இறுதிக்குள் தயாரித்து வழங்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. அதன்படி, முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு “வந்தேபாரத் … Read more

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை 3 மடங்கு அதிகரிப்பு: அறக்கட்டளை நிர்வாகி தகவல்.!

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு முதற்பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், ‘ராமர் கோயிலுக்கான நன்கொடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், திருப்பதி பாலாஜி கோயிலைப் போலவே இங்கும் தினமும் நன்கொடையாக பெறப்பட்ட தொகையை கணக்கிட வேண்டிய நிலை ஏற்படலாம். வழக்கத்திற்கு மாறாக ரொக்க நன்கொடைகள் மூன்று … Read more

ஆளுங்கட்சி – எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது. ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் … Read more