கிரண் படேல்: போலி PMO ஆபிஸர், Z பிளஸ் பாதுகாப்பு, பதறிய காஷ்மீர்… சிக்கலில் பாஜக அரசு!

கிரண் படேல் கைது சம்பவம் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இவரை ஜம்மு காஷ்மீரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கிழக்கு ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 3ஆம் தேதி கைது செய்தனர். இவர் அந்த ஓட்டலில் தன்னை பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி எனக் கூறி தங்கியிருந்தது தான் ஹைலைட். மாவட்ட மேஜிஸ்டிரேட் சந்தேகம் இவரது நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழவே மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவின் பேரில் அதிரடியாக … Read more

தொழிலதிபர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி 80 சவரன் நகைகள் கொள்ளை..!

புதுச்சேரியில், தொழிலதிபர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 38 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பலை, சிசிடிவி காட்சி அடிப்படையில் அடையாளம் கண்ட போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். ரெயின்போ நகரில், நேற்று இரவு வீட்டு வாசலில் நின்ற கருணாநிதியிடம் விலாசம் கேட்பது போல் நடித்து, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம், நகைகளை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை … Read more

இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது என்று ட்வீட் செய்த கன்னட நடிகர் கைது

பெங்களூரு: இந்துத்துவம் பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது” என்று ட்வீட் செய்த, கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சமத்துவம் என்ற உண்மையின் மூலமே இந்துத்துவத்தை வீழ்த்த முடியும் என்றும் அவர் தனது ட்வீட்டில் கூறியிருந்தார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ‘அமேசான்’ நிறுவனம்!

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ், உக்ரைன் – ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் வளர்ந்த நாடுகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு … Read more

சிலிண்டர் விலையை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?- திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி

புதுடெல்லி: ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பது மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் தேவையை சமாளிப்பது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி அளித்த பதில் வருமாறு: 14.2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் மேற்கொள்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த … Read more

டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: டெல்லி அரசின் பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்திய நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

"டெல்லி பட்ஜெட்டை நிறுத்தாதீர்கள்"- பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: “தயவு செய்து டெல்லி அரசின் பட்ஜெட்டை நிறுத்த வேண்டாம்” என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார். டெல்லிக்கான 2023 – 2024ம் நிதியாண்டுக்கா பட்ஜெட் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேராவையில் தாக்கல் செய்யப்பட இருந்தது. இதனை அம்மாநில நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்ய இருந்தார். இந்தநிலையில், நேற்று (திங்கள்கிழமை) மாலை, டெல்லி பட்ஜெட்டை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் … Read more

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் நோட்டீஸ்

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதானி குழும முறைகேடு பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க அரசு தவறிவிட்டது பற்றி விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும், மாநிலங்களவையில் திமுக எம்.பி திருச்சி சிவாவும் நோட்டீஸ்கொடுத்துள்ளனர்.

'டெல்லி மக்கள் கைகூப்பி கேட்கிறார்கள்'- பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மத்திய அரசு ஒப்புதல் வழங்காததால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தில் அவர், “கடந்த 75 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட் முடக்கப்படுவது இதுவே முதல் முறை. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். டெல்லி மக்கள் கைகூப்பி கேட்கிறார்கள்; பட்ஜெட்டை நிறுத்தி விடாதீர்கள்” என அவர் குறிப்பிட்டிருப்பதாக தெரிகிறது. அதே வேளையில் … Read more

நாடாளுமன்றத்தின் மாடியில் இருந்தவாறு எதிர்க்கட்சிகள் போராட்டம் – இரு அவைகளும் மதியம்வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் முதல் மாடியில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. எனினும், இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் … Read more