பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்: பிளாஸ்டிக் பைகளுக்கு 'Bye Bye' என மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஒவ்வொரு மக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு ‘Bye Bye’ சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும் மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்டுவதுடன், தூய்மையும் உறுதி செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி … Read more

மக்கள் பீதி..!! மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம்..!!

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மேகாலயா மாநிலம் தூர நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை காலை 9.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட … Read more

என்ன தைரியம் இருந்தால் என் காதலிக்கு நீ மெசேஜ் அனுப்புவே – ஆத்திரத்தில் கல்லூரி மாணவர் படுகொலை..!!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலைகழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் நவீன். பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹரஹர கிருஷ்ணா பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர். இந்நிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், கிருஷ்ணாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. நவீனை ஒழித்து கட்ட முடிவு செய்து உள்ளார். இதன்படி, நவீனை அழைத்து வெளிவட்ட சாலையில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்து … Read more

‘நமக்கான நேரம் வந்துவிட்டது’ – எதிர்கட்சிகளுக்கு பிரியங்கா காந்தி அழைப்பு.!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் திரிபுரா மாநிலத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மேலும் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய … Read more

ராகுல் காந்தியின் 2-ம் கட்ட ஒற்றுமை பயணம் குஜராத்தில் தொடங்குவதாக காங்கிரஸ் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை முதல் கட்டமாக ஒற்றுமை பயணம்  ராகுல் காந்தி மேற்கொண்டார். குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரசேத்தின் பாசிகட் வரை 2-வது கட்டமாக ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ளயுள்ளார் என்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

”இ-சஞ்சீவினி செயலியால் 10 கோடி பேர் பலன்..” – பிரதமர் மோடி..!

பணப் பரிமாற்றத்திற்கான இந்தியாவின் UPI மற்றும் இணையம் மூலமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி செயலி ஆகியவை டிஜிட்டல் இந்தியாவின் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று மனதின் குரல்  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 98வது பதிப்பில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் யூபிஐ, சிங்கப்பூரின் பேநவ் இணைப்பால் உலகின் பல நாடுகள் யூபிஐயை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார். மேலும், கரோனா காலத்தில் துவங்கப்பட்ட இ-சஞ்சீவி … Read more

உ.பி முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்த காவலர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு  பாய்ந்து காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநில போலீஸ் ஏட்டு சந்தீப் யாதவ் என்பவர், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு படைப்பிரிவில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுப்பில் சென்ற சந்தீப், தனது வீட்டில் இருந்தபோது தனது கைத்துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் அவருடைய கைத்துப்பாக்கி வெடித்தது. இதனால் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ … Read more

இந்தியாவின் UPI உலக நாடுகளை ஈர்க்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பமான UPI உலக நாடுகளை ஈர்த்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தும் மான் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. பிரதமரின் இந்த 98வது மான் கி பாத் உரையை, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இருந்தவாறு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் கேட்டனர். இந்த வானொலி உரையில் … Read more

ஹைதராபாத்தில் தனது நண்பனின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞன்..!

ஹைதராபாத்தில் தனது காதலிக்கு முன்னாள் காதலனான தனது நண்பன் குறுஞ்செய்தி அனுப்பியதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால், அவரை நண்பனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நவீன் மற்றும் ஹரிஹர கிருஷ்ணா ஆகியோர் கல்லூரியில் ஒன்றாக படித்ததாகவும், அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. நவீன் முதலில் காதலை தெரிவித்து மாணவியுடன் பழகி வந்தநிலையில், ஓரிரு ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியுடன் ஹரிஹர கிருஷ்ணா பழகி வந்துள்ளார். அப்போது முன்னாள் … Read more

மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

மைசூர்: மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கிருஷ்ணராஜபுரம் – பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அந்த ரயில்  மீது கற்கள் வீசினர். இதனால் ரயிலின் 2 ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் பயணிகள் யாரும் … Read more