பல மாநிலங்களின் அரசியலில் தடம் பதித்த சரத் யாதவ் – பிஹாரின் ‘கிங்மேக்கர்’ ஆக இருந்த பொதுவுடைமைவாதி
புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப் பட்டிருந்தார். மூச்சுத்திணறல் காரணமாக டெல்லிக்கு அருகே குருகிராமில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (வியாழன்) இரவு காலமானார். அவருக்கு வயது 75. மத்திய பிரதேசத்தின் ஹோசிங்காபாத் மாவட்டம், பபாய் கிராமத்தில் 1947-ல் பிறந்தவர் சரத் யாதவ். 1971-ல் பொறியியல் கல்லூரி மாணவர் பேரவை தலைவரானார். அப்போது அரசியலில் நுழைந்த அவர், காங்கிரஸுக்கு … Read more