பீகாரில் நக்ஸலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல்!

பீகார் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லதுய்யா பஹாட் பகுதியில் பீகார் காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள குகையில் நடத்திய சோதனையில் 149 வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். Source link

பீகாரில் 160க்கும் மேற்பட்ட வெடிபொருள் பறிமுதல்

புதுடெல்லி: பீகாரில் நக்சல் தேடுதல் வேட்டையின்போது 160க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த வெடிபொருட்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பறிமுதல் செய்தனர். அவுரங்காபாத் மாவட்டம் லதுயா பகாட் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முதலில் 13 சக்தி வாய்ந்த வெடிமருந்துகளையும், தொடர்ந்து 149 வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், பீகார் மாநில போலீசாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் – 48 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 48வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. திரிபுராவில் கடந்த தேர்தலில் 36 இடங்களில் வென்று பாஜக ஆட்சியை பிடித்தது. வரும் தேர்தலில் இங்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் திரிபுரா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் … Read more

திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 54 பா.ஜ வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்: டவுன் போர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சாகா போட்டி

புதுடெல்லி: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்களின் பட்டியலை பாஜ நேற்று வௌியிட்டது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகள் கொண்ட அங்கு பா.ஜ ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ 55 தொகுதியிலும், கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 5 தொகுதியிலும் போட்டியிடுகிறது. பா.ஜ சார்பில் 54 தொகுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தற்போதைய திரிபுரா முதல்வர் மாணிக் சாகா டவுன் போர்டோவாலி தொகுதி … Read more

டெல்லி அரசு ஊழலை அம்பலப்படுத்துவோம் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தகவல்

புதுடெல்லி: டெல்லி பாஜகவின் செயற்குழு கூட்டம் டெல்லியில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது: டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சாலை உள்கட்டமைப்புப் பணிகள் முதல் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவது வரை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் நிதி வழங்கி உள்ளது. ஆனால், டெல்லி அரசு ஊழலின் மையமாக விளங்குகிறது. டெல்லி ஆட்சியாளர்களின் ஊழலை பாஜக விரைவில் அம்பலப்படுத்தும். டெல்லியில் … Read more

நிலக்கரி வரியில் ஊழல் சட்டீஸ்கரில் 4 பேர் கைது

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நிலக்கரி வரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில்  4 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சட்டீஸ்கரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலக்கரி வரியில் ரூ.540கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் கடந்த 13ம் தேதி டெல்லி மற்றும் புனேவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதனை தெடர்ந்து கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் சட்டீஸ்கர் முதல்வரின் துணை செயலாளர் சவுமியா சவுராசியா கைது செய்யப்பட்டார். நேற்று சவுமியாவின் நம்பிக்கைக்குரிய நபராக … Read more

புதிதாக சிந்தியுங்கள், முன்னேறுங்கள் – கர்நாடக மாணவர்களுக்கு அமித் ஷா அறிவுரை

ஹப்பள்ளி: கர்நாடகா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹப்பள்ளியில் உள்ள பிவிபி பொறியியல் கல்லூரியில் நடந்த அமிர்த மகோத்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசியதாவது: நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த உன்னத தியாகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். நாட்டுக்காக உங்கள் வாழ்வை தியாகம் செய்ய முடியாது என்றால், நாட்டுக்காக நீங்கள் வாழ்ந்து, நம் நாட்டை உலகின் முதல் நாடாக ஆக்க வேண்டும். இதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உங்களுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார். … Read more

தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி

லக்னோ: தினமும் ரூ.500 மட்டுமே சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் இருக்கும் தெருக்களில் துணிகளை விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதித்து வருபவர் 40 வயது துணி வியாபாரி இஜாஸ் அகமது. இந்த நிலையில் ரூ.366 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி  அடைந்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி வரியாக 366 கோடி ரூபாய் … Read more

இந்திய விமானப் படையின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல் – ஒரு விமானி உயிரிழப்பு; 2 பேர் படுகாயங்களுடன் மீட்பு

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதியதில் ஒரு விமானி உயிரிழந்தார். 2 விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பினர். மரங்கள் மீது விழுந்த அவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இந்திய விமானப் படை தளம் உள்ளது. அங்கிருந்து மிராஜ்-2000 ரக போர் விமானமும், சுகோய்-30 ரக போர் விமானமும் நேற்று காலை வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டன. மிராஜ் விமானத்தில் ஒரு விமானியும், சுகோய் விமானத்தில் 2 விமானிகளும் இருந்தனர். … Read more

ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி

தன்பாத்: ஜார்கண்டில் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் மருத்துவரான தம்பதியர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். ஜார்கண்டில் உள்ள தன்பாத் பகுதியில் ஒரே கட்டிடத்தில் வீடு மற்றும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையில் உள்ள அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீ பற்றியுள்ளது. மளமளவென பரவிய  தீ மருத்துவமனை முழுவதும் பரவியது. தீ கட்டிடம் முழுவதும் பரவியதால் அதில் இருந்தவர்கள் யாராலும் வெளியே வரமுடியவில்லை. இதனிடையே மருத்துவமனை தீப்பற்றி எரிவது குறித்து … Read more