சட்டீஸ்கரில் மதமாற்ற புகார்: வழிபாட்டு தலத்தை அடித்து நொறுக்கிய மக்கள்
நாராயண்பூர்: சட்டீஸ்கரில் மத மாற்ற விவகாரத்தில் வழிபாட்டு தலத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். சட்டீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டம்,எட்கா என்னும் கிராமத்தில் நேற்றுமுன்தினம் மத மாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மதமாற்றத்தை கண்டித்து நேற்று பழங்குடியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மாவட்ட எஸ்பி சதானந்த் குமாரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அப்போது ஒரு கும்பல் எஸ்பி சதானந்த் குமாரை தாக்கியது. … Read more