முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் உடல்நலக்குறைவால் காலமானார்

குருகிராம்: சோசலிஸ்ட் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷரத் யாதவ் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். 75 வயதான அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துவந்தார். இன்று மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்குச் செல்ல குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஷரத் யாதவ் இறப்பை அவரின் மகளும் காங்கிரஸ் தலைவருமான சுபாஷினி ஷரத் யாதவ், ட்விட்டரில் “அப்பா இப்போது இல்லை” … Read more

ராமர் பாலம் வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்!

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்தியா – இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் மணல் திட்டுக்கள் உள்ளன. சுண்ணாம்பு கற்களால் உருவான இவை, ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் கற்பணை என்றும், இயற்கையாக உருவான மணல் திட்டுக்களே அவை என்றும் கூறப்படுகிறது. … Read more

18 குழந்தைகள் பலியாக காரணமான இருமல் மருந்து உற்பத்திக்கு உ.பி. அரசு தடை

நொய்டா: உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து உற்பத்திக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மரியான் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட அம்ப்ரோனால், டோக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்துகள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் உஸ்பெகிஸ்தானில் டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மருத்துவ … Read more

கர்நாடக ஊர்திக்கு அனுமதி: ஸ்டாலினுக்கு ஒரு நியாயம்? பொம்மைக்கு ஒரு நியாயமா?

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் இடம்பெறக் கூடிய பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் … Read more

காஷ்மீரின் ஹாங்கில், சர்பலில் இடங்களில் பனிச்சரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் ஹாங்கில், சர்பலில் இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. எந்தவித உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை என கந்தர்பால் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஹாங்க், சர்பல் பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டிற்குள்ளே இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வெறும் 15 நிமிட பயணம்… மாஸான மும்பை – ட்ரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலம்… அசத்தலான 8 விஷயங்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய மும்பையில் இருந்து நேவி மும்பைக்கு விரைவாக பயணிக்கும் வகையில் நாட்டின் மிகப்பெரிய கட்டும் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்கு மும்பை – ட்ரான்ஸ் ஹார்பர் லிங்க் (Mumbai – Trans Harnour Link) பாலம் என பெயர் வைத்துள்ளனர். மும்பை டூ நேவி பாலம் சுருக்கமாக MTHL பாலம் என்கின்றனர். இதன்மூலம் மத்திய … Read more

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்

பீகார்: ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி யாதவ் ஃபேஸ் புக் சமூக வலைத்தளத்தில்  உறுதிப்படுத்தியுள்ளார்.

பீகாரிலும் பரவும் மனுஸ்மிருதி எதிர்ப்பு அலை; கல்வி அமைச்சர் அதிரடி.!

பெண்களையும், ஆதி குடிகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் சிறுமைப்படுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதேபோல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது … Read more

ஓய்வில் உள்ள ஊழியர்களுக்கு இடையூறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – Dream11 ஃபேண்டஸியின் அதிரடி அறிவிப்பு

மும்பையை தளமாக கொண்ட Dream11 ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் தளத்தில் உள்ள ஊழியர்கள், ஓய்வில் இருக்கும் சக ஊழியர்களுக்கு இடையூறு செய்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் இணை நிறுவனர் பவித் ஷெத், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்தார். Dream11 ஊழியர்கள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு வாரம் விடுமுறை எடுக்க வேண்டும் என்றும், அப்போது நிறுவனத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல்கள் உள்ளிட்ட இடையூறுகள் இருக்காது என்றும் அவர் … Read more

கொல்கத்தாவில் உள்ள அங்காடியில் பயங்கர தீ விபத்து: காவல்துறையினர் விசாரணை

கொல்கத்தா: கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இயங்கிய அங்காடி ஒன்றில் கடைகள் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சால்ட் லேக் பகுதியில் குறுகலான இடத்தில் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மூங்கில் மற்றும் தென்னை கீற்றங்களை கொண்டு அமைக்கப்பட்ட 100-க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மாற்ற கடைகளுக்கும் தீவிரமாக பரவியது. தகவலறிந்து 5 தீயணைப்பு … Read more