ரிஷப் பந்த் கார் விபத்துக்கு காரணம் என்ன ? வெளியானது பிசிசிஐ அறிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் உயிர் தப்பிய சம்பவம் குறித்து பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் தனியாக இரவில் கார் ஓட்டி வந்தபோது, கண் அசந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புகளில் மோதி தீப்பிடித்ததாகவும், கார் கதவை உடைத்துக் கொண்டு, ரிஷப் பந்த் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹரியானா அரசுப்போக்குவரத்து பேருந்து நடத்துனர் பரம்ஜித் மற்றும் ஓட்டுனர் சுஷில் குமார் … Read more

இந்தியாவின் இருமல் மருந்து காரணமாக 18 குழந்தைகள் உயிரிழப்பு: உற்பத்தி நிறுத்தம்

நொய்டா: உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த இந்தியாவின் இருமல் மருந்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நொய்டாவில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் திறப்பு எப்போது? இன்னும் எத்தனை நாள்கள் இருக்கு தெரியுமா?

பிரம்மாண்டமாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்றம் எப்போது திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியிலுள்ள ‘சென்ட்ரல் விஸ்டா’ பகுதியை மறுவடிவமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் தற்போதைய நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். டாடா நிறுவனம் சாா்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் … Read more

புத்தாண்டு கொண்டாட்டம் – மும்பையில் பலத்த பாதுகாப்பு..!

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், மும்பை போன்ற பெருநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் திரள்வார்கள் என்பதால், காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது. கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை அதிகாலை வரை பாதுகாப்பு காரணத்துக்காக படகுகள் போக்குவரத்து நிறுத்தப்படும் என, காவல்துறையினர் தெரிவித்தனர். மும்பை நகரில் 5 … Read more

 9 மாநில தேர்தலையொட்டி ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்

புதுடெல்லி: அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதில் 12 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 2023ம் ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் … Read more

பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து சிறுமியை கட்டிப்பிடித்து பைக் ஓட்டிய வாலிபர்: கவனித்து அனுப்பிய போலீசார்

திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலை சாலையில் நேற்று முன்தினம் ஒரு காதல் ஜோடி பைக்கில் செல்வதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் முகம்சுளித்தனர். காரணம், பைக் ஓட்டிய வாலிபர் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது பள்ளி சீருடை அணிந்த ஒரு சிறுமியை அமர வைத்து தன்னை கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டினார். அப்போது, காதல் ஜோடியின் அந்த பைக்  பயண காட்சியை காரில் சென்றவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். … Read more

18 குழந்தைகள் பலி எதிரொலி நொய்டா மருந்து நிறுவனத்தின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் இருமல், மருந்து குடித்த 18  குழந்தைகள் பலியானதால்,நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மரியன் பயோடெக் நிறுவனம் டோக் 1 மேக்ஸ் என்ற குழந்தைகளுக்கான இருமல், சளிக்கான மருந்து தயாரிக்கிறது. இந்த இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் பலியானதாக, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது. ஏற்கெனவே, காம்பியாவில் இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட 66 குழந்தைகள், இறந்த சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து … Read more

அதிர்ச்சி..!! உயிரை காப்பாற்ற வேண்டிய ஆக்ஸிஜன் சிலிண்டர் 2 பேரின் உயிரை காவு வாங்கியது..!!

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் தயாள் மருத்துவனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் அதிர்ந்து விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முகல்சராய் எம்எல்ஏ வந்தனர். இதையடுத்து … Read more

ஃபேஸ்புக் லைவ்வில் 27 வயது இளைஞர் தற்கொலை.. காரணம் இது தான்..!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜெயதீப் ராய் (27) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் வற்புறுத்துவதால் எனது காதலி என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்டார். எனது மகனின் மரணத்திற்கு பெண்ணின் குடும்பமே காரணம் என இளைஞனின் குடும்பத்தினர் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்த ஜெயதீப் ராய், சில்சாரில் உள்ள வாடகை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஃபேஸ்புக் லைவ்வில், “நான் ஒரு … Read more

பிரதமரின் தாயார் 100-வது வயதில் காலமானார் – அரசு மரியாதை தவிர்ப்பு; எளிமையான இறுதிச் சடங்கு

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்று காலமானார். குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அரசு மரியாதை இல்லாமல், எளிமையான முறையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. 1923 ஜூன் 18-ம் தேதி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் பிறந்தவர் ஹீராபென். அருகில் உள்ள வட்நகரைச் சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியை சிறுவயதிலேயே திருமணம் செய்தார். வட்நகர் ரயில் நிலையத்தில் தாமோதர் தாஸ், தேநீர் விற்பனை செய்து வந்தார். … Read more