சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வலிமை நமது படைகளுக்கு உண்டு… முன்னாள் ராணுவத் தளபதி பேச்சு

இந்தியாவின் இறையாண்மைக்குள் சீனா மூக்கை நுழைத்தால் பதிலடி கொடுக்கும் வலிமை நமது படைகளுக்கு உள்ளது என்று முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஜே.ஜே.சிங் கூறியுள்ளார். சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய ஜே.ஜே.சிங், சீனா சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பதால் அது தரும் வாக்குறுதிகளை நம்பிவிடக்கூடாது என்றும் எச்சரித்தார் Source link

பிப்.16 சட்டமன்ற தேர்தல் திரிபுராவில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

அகர்தலா: 60 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இம்மாதம் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜனவரி 31ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுபாசிஷ் பந்தோபாத்யாய  தெரிவித்தார். 28 லட்சத்து 13 ஆயிரத்து … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தது யார்? – தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் விசாரணை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்தது குறித்து தேவஸ்தான பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில்தீவிரவாதிகளின் தாக்குதலுக்குகுறியாகாமல் இருக்க 24 மணிநேரமும் ஆக்டோபஸ் படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளன. திருமலையில் சுமார் ஆயிரக்கணக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதப் படையினர், ஊர்க்காவல் படையினர், ஸ்ரீவாரி சேவகர்கள், விஜிலென்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள் என அலிபிரி முதற்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் … Read more

திருப்பதியில் பெரிய ஷாக்… மர்ம ட்ரோன், வைரலான வீடியோ- பதறி போன தேவஸ்தானம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் உலகப் புகழ்பெற்றது. பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. பக்தர்கள் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். திருமலையில் பாதுகாப்பு அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் வழிப்பாதையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் … Read more

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழப்பு

ஆந்திர: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் ஏலுரு மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி ராவ் என்று தெரிய வந்துள்ளது. 2 பேரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்முவில் குண்டுவெடிப்பு – 7 பேர் படுகாயம்

ஜம்மு: ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்களும், போலீஸாரும் விரைந்து சென்று 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதி முழுவதையும் பாது காப்பு படையினர் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் … Read more

2 மனைவிகளுடன் வாரத்தில் 3 நாட்கள்! 7வது நாளில் யாருடன்? – புது ஒப்பந்தம்

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் வித்தியாசமான முறையில், இரண்டு பெண்களுக்கு இடையே ஒரு ‘தனிப்பட்ட’ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதாவது, இரண்டு பெண்களுமே ஒரே நபரைதான் திருமணம் செய்துள்ளனர். இதில், அந்த நபர் எத்தனை நாள்கள் இருவரோடும் தனித்தனியாக வசிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  அந்த ஒப்பந்ததின் மூலம், அந்த நபரின் மனைவிகள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். தங்கள் கணவர், வாரத்தில் தலா 3 நாள்கள் ஒருவருடன் இருக்க வேண்டும் எனவும், மீதம் … Read more

ஒலிமாசு காரணமாக மேற்குவங்க சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை குறைவு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் ஒலி மாசு காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது. பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பல்லவ்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கில் வரும் பறவைகள் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகச் சுருங்கி விட்டதால் பறவை ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனையடுத்து பறவைகள் கணக்கெடுப்பு குறித்து இன்று சிறப்பு பயிற்சி வகுப்பு … Read more

ரஷ்யாவிலிருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: 240 பயணிகள் உயிர் தப்பினர்

பனாஜி:  மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து அஷுர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 240 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. இது கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 4.15 மணி தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக  டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி வந்தது. இதையடுத்து அந்த விமானம் இந்திய வான்எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு உஸ்பெகிஸ்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது.   … Read more

பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இடம்பெறும் புதிய அம்சங்கள் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்றுவரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். … Read more