Income Tax: புத்தாண்டில் ஒரு மாஸ் செய்தி, இந்த வருவாய்க்கு வரி செலுத்த வேண்டாம், தெரியுமா?

வருமான வரி ஸ்லேப்: 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.  புத்தாண்டு மக்களுக்கு புதிய நம்பிக்கைகள் நிறைந்ததாக அமையும். அதே நேரத்தில், இந்த ஆண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களையும் செய்வார்கள். இந்த ஆண்டு மக்கள் தங்கள் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் பல வேலைகளைச் செய்ய உள்ளனர். இந்த புத்தாண்டில் சாமானியர்கள் சில முக்கியமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றில் சில மக்களுக்கு புத்தாண்டு பரிசாக … Read more

பீலே மணற்சிற்பம் அமைத்து அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்

பிரேசில் கால்பந்து ஜம்பவான் பீலே மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கிழக்கு கடற்கரை நகரான ஒடிசாவின் பூரியில் பிரம்மாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன பட்நாயக், இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்திருந்தார். ரசிகர்களும், பொது மக்களும், இந்த மணல் சிற்பத்தை பார்வையிட்டு, பீலேவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதே போன்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் கால்பந்து வீர்ர்கள் மற்றும் கால்பந்து ஆர்வலர்கள், பீலேவின் முழு உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். … Read more

மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின: சபரிமலையில் புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நாளை புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் கடந்த 27ம் தேதி மண்டல பூஜை முடிந்தது. 2 நாள் இடைவேளைக்குப் பின் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை … Read more

ரிஷப் பண்டிற்கு வெற்றிகரமாக முடிந்த ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை!

ரிஷப் பண்டிற்கு இன்று சிறிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று (டிச.30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்டின் வலது முழங்கால் மற்றும் வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவும், நெற்றி, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. … Read more

“இந்திய – சீன எல்லை குறித்த கவலை எனக்கு இல்லை; ஏனெனில்…” – அமித் ஷா

பெங்களூரு: இந்திய – சீன எல்லை குறித்த கவலை தனக்கு இல்லை என்றும், ஏனெனில் நமது எல்லையை பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள் இந்தோ-திபெத் எல்லை படை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு அருகே உள்ள தேவனஹல்லி நகரில் இந்தோ – திபெத் எல்லை படைக்கான நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு … Read more

புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்?

மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, மத்திய பாஜக ஆட்சிக்கு பிறகு, பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் கட்டமாக கடந்த ஜனவரி … Read more

அமெரிக்காவை மிரட்டும் புதிய வகை கொரோனா தொற்று… இப்போது இந்தியாவில்!

Omicron XXB.1.5 Variant : நியூயார்க்கில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான ஒமிக்ரான் XXB.1.5 கொரோனா தொற்று வகை தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் XXB.1.5 தொற்று, குஜராத்தில் மாநிலத்தில் தற்போது முதல் முறையாக தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, இப்போது அமெரிக்காவில் நாடு முழுவதும் 41% புதிய தொற்றுகள் XBB.1.5 தொற்றால் ஏற்பட்டுள்ளதாக , கடந்த வாரத்தில் பாதிப்பு இருமடங்காக … Read more

28 ஆண்டுகளுக்கு முன், 5 கொலைகள் செய்துவிட்டு தப்பிய நபரை கைது செய்த மும்பை போலீசார்!

5 கொலைகள் செய்துவிட்டு தப்பிய நபரை, 28 ஆண்டுகளுக்குப்பின், மும்பையில் போலீசார் கைது செய்தனர். 1994ம் ஆண்டில் நவம்பர் மாதம் 17ம் தேதியில் 27 வயது பெண் சக்ராம்தேவி பிரஜாபதி மற்றும் அவருடைய 4 சிறுகுழந்தைகள் மூன்று நபர்களால் தாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் சிக்காத நிலையில், தேடி வந்த போலீசார், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சவுகான் என்ற ஒரு கொலையாளியை கைது செய்துள்ளனர். சவுகானின் குடும்பம் இந்தியாவில் இருப்பதாகவும், அவர்களை காண சவுகான் ஆண்டுக்கு … Read more

இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: இந்திய ஒற்றுமை நடைபயணம் பற்றி ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்து கவனம்பெற வைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை சாதாரணமாகத்தான் தொடங்கினேன். மேலும், ஒற்றுமை பயணம் பல்வேறு மக்கள் உணர்வுகளை, குரல்களை பிரதிபலிக்கிறது என மெதுவாக புரிந்து கொண்டேன். பாஜக, ஆர்.எஸ்.எஸ். எங்களை விமர்சித்தது ஒற்றுமை பயணம் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என கூறினார். 2024 நாடாளுமன்ற … Read more

“எங்களுக்கு இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிகரமானது” – காரணங்களை அடுக்கிய ராகுல் காந்தி

புதுடெல்லி: “இந்திய ஒற்றுமை யாத்திரை எங்களுக்கு வெற்றிகரமான ஒன்று. இந்த யாத்திரை பல முடிவுகளை எட்டியுள்ளது. இதன்மூலம புதிய வழியில் சிந்திக்க முயல்கிறேன்” என்று தனது ஒற்றுமை யாத்திரை குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, பாதுகாப்பு விதிகளை மீறியது என ராகுல் காந்தியின் மீதான அரசு தரப்பு குற்றச்சாட்டு, டெல்லியில் நடந்த யாத்திரையின் போது ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு … Read more