பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்  மோடி நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக … Read more

உத்தரபிரதேத்தில் வினோத உடலுடன் பிறந்த குழந்தை..!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த குழந்தையின் தலை முதல் இடுப்பு வரை, பின்புறம் கருப்பு முடி வளர்ந்துள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பிறந்த குழந்தைக்கு ஜெயண்ட் கான்ஜெனிட்டல் மெலனோசைடிக் நெவஸ் என்ற நோய் உள்ளது. இந்த நோயால், அவரது தலையில் இருந்து இடுப்பு வரை முடி வளர்ந்துள்ளது. வித்தியாசமான குழந்தை பிறந்தது குறித்த … Read more

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் கொரோனா கண்டறியபட்டபோதும் தொடக்கத்தில் அந்நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியது. ஆனால், விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முறியடிகப்பட்டது. மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், தொடக்கத்தில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தாத … Read more

சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியில் உயிரிழந்த தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

நெல்லூர்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், கந்துகூரு என்டிஆர் சர்க்கிள் அருகே ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கேட்க தொண்டர்கள் ஏராளமானோர் … Read more

Breaking: பிரதமர் மோடியின் தாயார் காலமானார்: ட்விட்டரில் பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரோபென் (100) கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அகமதாபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை யு.என்.மேத்தா மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதமரின் தாயார் ஹீரோபென் காலமானார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) காலமானார்!

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

பாரம்பரிய முறைப்படி நடந்த முகேஷ் அம்பானியின் மகன் நிச்சயதார்த்தம்..!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவரது மனைவி நீதா அம்பானி. இந்த தம்பதியின் 3வது மகன் ஆனந்த் அம்பானி. இவர், அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட் பார்ம்கள் மற்றும் ரீடெயில் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக இருந்தவர், தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். அதேபோல், தொழிலதிபர் வீரேன் … Read more

கடலில் 400 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: ரஷ்யாவுடன் சேர்ந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்த ஏவுகணைகள் சீறிப்பாயும் வேகம் மற்றும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப் படை நேற்று மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒன்றை எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இருந்து கடலில் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தியது. இந்தப் பரிசோதனை … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல்நிலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அவரது மறைவை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர், இன்று அதிகாலை உணர்வுப்பூர்வமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா… ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது” என … Read more

மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாத டாக்டர்கள் பணியாற்ற அனுமதித்ததால் சிபிஐ ரெய்டு: நாடு முழுவதும் 91 இடங்களில் நடந்தது

புதுடெல்லி: வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இந்தியாவில் பணியாற்ற அனுமதி அளித்தது தொடர்பாக நாடு முழுவதும் 91 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடிப்பவர்கள் இந்தியாவில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ பட்டதாரி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் இங்கு மருத்துவராக பணியாற்ற  அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் வெளிநாடு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சில மாநில மருத்துவ கவுன்சில்கள் … Read more