பி.எப்.7 கொரோனா பரவல் எதிரொலி: 6 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம்; ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: கொரோனா ஓமிக்ரான் பிஎப்-7பரவல் உலக நாடுகளை அச்சுறுத்த்திவரும் நிலையில், பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவும் தற்போது சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரிய, தாய்லாந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிடவேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இணையதள பதிவேற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கும் என கூறியுள்ளார். மேலும் … Read more

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூ.1000: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

அரசின் எந்தவித உதவித் தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு வரும் பொங்கலுக்குள் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “புதுச்சேரியில், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை 2400 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதுபோல், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை 1200 ரூபாய் … Read more

பிரதமர் மோடியின் தாயார் குணமடைந்து வருகிறார்: மருத்துவமனை தகவல்

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தயார் ஹீராபென், குணமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை அறிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ”அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. … Read more

புதிய கொரோனா: 4ஆவது டோஸ் தடுப்பூசி போடணுமா?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அரசாங்கங்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசியை தங்களது நாட்டு மக்களுக்கு வழங்கின. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 220.08 கோடி தடுப்பூசி டோஸ்கள் … Read more

கேரளாவில் சுமார் 56 இடங்களில் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கேரளாவில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். எர்ணாகுளம், கோழிக்கோடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, மலப்புரம், திருவனந்தபுரம் போன்ற இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே இந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 56 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. Source link

பாதுகாப்பு விதிகளை ராகுல் மீறினார்!: மத்திய ரிசர்வ் படை விளக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசின் ஒற்றுமைக்கான நடைப்பயணம் 100 நாள்களை கடந்து நடைபெற்று வருகின்றது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நடைபயணம் முடிந்துள்ள நிலையில் கடந்த வாரம் டெல்லிக்குள் நுழைந்தது. அப்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தவறிவிட்டதாகவும்,  ராகுலுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு உள்ள நிலையில் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும் காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் கட்சி, … Read more

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையிலிருந்து எப்போது டிஸ்சார்ஜ்? குஜராத் அரசு தகவல்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த ஜூன் மாதம் தனது 99-வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னுக்கு நேற்று முன்தினம் இரவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தார். தனது தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். … Read more

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி | கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது நாளாக இன்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் 56 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நிதியுதவி செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 22 மாநிலங்களில் கிளைகளைப் பரப்பி செயல்பட்டு … Read more

ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் – அமைச்சர் ரோஜா

ஆந்திராவில் பொதுக்கூட்ட நெரிசலில் 8 பேர் பலியானதற்கு, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவே காரணம் என்றும், நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார். Source link

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவித்ததை கொடுக்க உள்ளோம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவித்ததை கொடுக்க உள்ளோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும். மேலும், புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.34-ல் இருந்து ரூ.37-ஆக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.