அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம், மத்திய அரசு தகவல்!

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அனைத்து வகையான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதிகள் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். எந்த விதிகளில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.  முன்னர் PFRDA விதிகளை தளர்த்தியது ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் … Read more

இன்னிக்கு ஒரு பிடி அய்யோ… அம்மா… கொத்தோட கவ்விருச்சே..!

கடைத்தெருவில் சுற்றிய நாய் ஒன்றை காலால் மிதிப்பது போல சைக்கை காட்டிய இளைஞரை நாய் தனது வாயால் ஒரு பிடிபிடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது தெரு நாய்கள் மிச்சம் மீதியை தின்றுவிட்டு அந்த தெருவுக்கு காவலனாக ஆங்குமிங்குமாக சுற்றி திரிவது வழக்கம் . அப்படி நடைபாதை சாப்பாட்டு கடை அருகில் பசி யோடு சுற்றிய நாய் ஒன்றை அந்தவழியாக நடந்து சென்ற இளைஞர் தனது காலால் எத்தி மிதிப்பது போல சைகை காட்டினார். … Read more

திருப்பதி கோயிலில் ஜனவரி மாதம் அங்கபிரதட்சணம் செய்ய இலவச டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு  

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.  முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் 14 வரையும் மற்றும் 28 தேதி  தவிர்த்து மற்ற நாட்களுக்கு டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாக என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி – விரைவில் குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் 99 வயதை அடைந்தார். ஆனால் தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். UN மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி & ஆராய்ச்சி நிலையம், அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறது.  இந்நிலையில் மோடியின் தாயாரை பார்க்க, குஜராத் பாஜக அமைச்சர் தர்ஷனாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். பிரதமர் … Read more

Rewind 2022 | அரசியல் முகம்: நரேந்திர மோடி – பாஜகவின் ‘அடையாள’ நம்பிக்கை!

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் இப்போது பிரதமர் நரேந்திர மோடி குறித்த விரைவுப் பார்வை இது. இந்திய அரசியலில் நரேந்திர மோடி என்பது வெறும் பெயரல்ல… பாஜகவின் முகம். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அங்கு பாஜக சார்பில் முன்னிறுத்தப்படும் ஒற்றை அடையாளம் மோடி. அனைத்து அலுவல்களுக்கும் இடையேயும் உத்தரப் பிரதேச தேர்தலாக இருக்கட்டும் குஜராத் தேர்தலாக இருக்கட்டும், இமாச்சலப் பிரதேச தேர்தலாக இருக்கட்டும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்கிறார் … Read more

ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி; கொதித்தெழுந்த காங்கிரஸ்.!

பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் இன்று கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, பல சந்தர்ப்பங்களில் அதன் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, “அதிகரிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இசட்+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ள … Read more

உணவகத்தில் கூடுதலாக சால்னா தராததால் மேலாளரை தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்கள் கைது!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள உணவகத்தில் கூடுதலாக சால்னா தராததால், மேலாளரை தாக்கி, உணவகத்தை சேதப்படுத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு உணவகத்திற்கு வந்த கிருஷ்ணகுமார், ஜெய் கணேஷ் ஆகிய இருவர், பிரைட் ரைஸ் வாங்கி, கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டுளனர். தேவையான அளவு தான் தர முடியும் என உணவக மேலாளர் கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும், கரண்டி மற்றும் செங்கல்லைக் கொண்டு மேலாளரை தாக்கியதோடு, உணவகத்தில் இருந்த பாத்திரங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். … Read more

காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாள் விழா: காங். கொடிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடிக்கு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். டெல்லி மட்டுமில்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா நடைபெற்றது. டெல்லியில் … Read more

மகாராஷ்டிராவுக்கு ஒரு அங்குலம் நிலம்கூட விட்டுத்தர மாட்டோம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர்

பெங்களூரு: கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலம்கூட மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் ‘எல்லை’ப் பிரச்சினை என்று எதுவும் இல்லை. மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் இருக்கும் பாஜக அரசுகள்தான் இதை பிரச்சினையாக்குகின்றன. கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. மூன்று இன்ஜின் ஆட்சி இது. கர்நாடகாவின் ஒரு அங்குலம் நிலத்தையும் நாங்கள் மகாராஷ்டிராவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். மகாராஷ்டிராவும் இதற்காக முயலக் … Read more

3 நாளில் 39 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு.!

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா இந்திய, தமிழக சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க எச்சரித்துள்ளது. அதிக மக்கள் நெருக்கம் உள்ள நாடான இந்தியாவில் புதிய வகை கொரோனா மிக வேகமாக பரவ வாய்ப்புள்ளதால் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. டிசம்பர் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர் 24, … Read more