கரோனாவை எதிர்கொள்ள நாடு முழுவதும் பயிற்சி ஒத்திகை: டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாடுளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கரோனா பரவலை எதிர்கொள்ள இந்தியா தாயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சி ஒத்திகை நடத்தப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஒத்திகையை நேரில் ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் லட்சக்கணக்கான பேர் ஒமிக்ரானின் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு … Read more

வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனியுடன் கடும் பனிப் பொழிவு நீடிக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி : தற்போது நிலவும் வானிலை மாற்றத்தால் வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மூடுபனியுடன் கடும் பனிப் பொழிவு நீடிக்கும். அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, மிசோரத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பனிப்பொழிவு வீசும் மற்றும் டெல்லி, சண்டிகர், வட ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு உ.பி., அரியானாவில் இன்று கடுங்குளிர் நிலவும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் அகிலேஷ் யாதவ், மாயாவதி பங்கேற்பு?

ஜனவரி முதல் வாரத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில் அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை `இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை முன்னிறுத்தி ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 9 மாநிலங்களில் 46 மாவட்டங்கள் வழியாக 108 நாட்கள் கடந்து டெல்லிக்குள் யாத்திரை நுழைந்திருக்கிறது. ஒரு வாரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் … Read more

நூறு நாள் வேலைத்திட்டத்தில் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு: ஜனவரி 1-ல் தொடக்கம்

புதுடெல்லி: நூறு நாள் வேலைத்திட்டம் என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை வரும் ஜனவரி ஒன்று முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் … Read more

திருப்பதியில் 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவுப்பு

திருமலை : ஜனவரி 1ம் தேதி முதல் திருப்பதியில் 9 இடங்களில் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்க படும் என ஏழுமலையான் கோவிலின் செயல் அலுவலர் அணில் குமார்சிங் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காக ஜனவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில்  வழியாக பத்தர்கள் அனுமதிக்க பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில் குமார்சிங் நேரில் ஆய்வு செய்தார். வைகுண்ட வாயில் தரிசனத்திற்காக … Read more

ஆந்திரா: மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நான்கு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தில் உள்ள பரவாடாவில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்றிரவு தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் நான்கு பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், இரண்டு … Read more

இந்தித் திணிப்பு: ஒன்றிய அமைச்சர் ஆணவ பேச்சு – சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

இந்தியை திணிக்க நினைப்பது அறிவியலும் அல்ல, அறிவார்ந்த செயலும் அல்ல என்று ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் “இந்தி சலகாகர் சமிதி” கூட்டத்தில் பேசும் போது இந்தித் திணிப்பை “கல்வித் துறையின் மறுமலர்ச்சி, மறு நிர்மாணம்” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார். அவரே … Read more

பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஆலை தொடங்கப்படுமா?: பாரிவேந்தர் கேள்வி

டெல்லி : பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஆலை தொடங்கப்படுமா என மக்களவையில் எம்.பி.பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்துஸ்தான் ஏரோனாடிக் நிறுவனம் போக்குவரத்து விமான தயாரிப்பு, கருவிகள் தயாரிப்பில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், வதோதரா விமான நிலையம் அருகே 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்தார்.   

Income Tax: வருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி, இனி இதற்கு வரி விலக்கு கிடைக்கும்

வருமான வரி: வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரும் அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்தவேண்டிய ஒரு முக்கியமான வரியாகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இந்த வரி முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு அரசாங்கம் பெரிய நிவாரணம் கொடுக்கப் போகிறது. வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் வகையில் பெரிய அளவில் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் புதிய உத்தரவை … Read more

5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்

கேரளா: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர்மட்டம் 5-வது முறையாக 142 அடியாக உயர்த்தப்பட்டதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 2014-ம் ஆண்டு முதல்முறை 142 அடியாக உயர்ந்த நிலையில் 2015, 2018, 2021-ம் ஆண்டுகளிலும் எட்டியது.