சாதி அரசியலை பிஹார் நிராகரித்தது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

சூரத்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சாதி அரசி​யலை மக்​கள் நிராகரித்து உள்​ளனர். இந்த தேர்​தலில் தோல்​வியை தழு​விய​வர்​கள் பேர​திர்ச்​சி​யில் மூழ்கி உள்​ளனர் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். பிர்சா முண்​டா​வின் 150-வது பிறந்த தினம் மற்​றும் பழங்​குடி​யினர் கவுரவ தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி குஜ​ராத்​தின் நர்​மதா மாவட்​டம், டெடி​யாபடா பகு​தி​யில் உள்ள தேவ​மோக்ரா தேவி கோயி​லில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வழிபட்​டார். இந்த கோயில் பழங்​குடி மக்​களின் கோயில் ஆகும். Source link

ஆந்திரா ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

விசாகப்பட்டினம்: ​ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் கடந்த 2 நாட்​களாக இந்​திய தொழில் கூட்​டாண்மை மாநாடு நடை​பெற்​றது. இதனை குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​தார். மாநாட்​டில் இந்​தியா மற்​றும் 72 நாடு​களின் தொழில​திபர்​கள், தலைமை நிர்​வாகி​கள் மற்​றும் இயக்​குநர்​கள் கலந்​து​கொண்​டனர்.நிறைவு நாளான நேற்று முதல்​வர் சந்​திர​பாபு பேசி​ய​தாவது: தொழில் கூட்​டாண்மை மாநாட்​டில் சுமார் ரூ.13 லட்​சம் கோடி வரை ஆந்​தி​ரா​வில் முதலீடு செய்ய தொழில​திபர்​கள் முன் வந்​துள்​ளனர். நாங்​கள் ஆட்​சிக்கு வந்த கடந்த 18 மாதங்​களில் … Read more

சேட்டை செய்யும் கணவன்களுக்கு 7 ஆண்டுகள் சிறை… வருகிறது புதிய மசோதா

Assam Anti-Polygamy Bill 2025: அசாம் சட்டப்பேரவையில் பலதார திருமண தடை மசோதா வரும் நவம்பர் 25ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

114 வயதில் காலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம், துமகூரு மாவட்​டம் குப்​பியை அடுத்​துள்ள குனிகலை சேர்ந்​தவர் சாலுமரத திம்​மக்​கா(114). திரு​மண​மாகி குழந்தை பாக்​கி​யம் அமை​யாத​தால் தனது கணவருடன் இணைந்து கர்​நாடக மாநிலம் முழு​வதும் பயணம் செய்து லட்​சக்​கணக்​கான மரங்​களை நட்​டார். இதனால் மரங்​களின் தாய் என சாலுமரத திம்​மக்கா அழைக்​கப்​பட்​டார். இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்​திய அரசு பத்​மஸ்ரீ விருது வழங்​கி​யுள்​ளது. முது​மை​யின் காரண​மாக திம்​மக்கா பெங்​களூரு​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். இதைத்​தொடர்ந்து … Read more

எச்சரிக்கை: நவம்பர் 20, 21, 22, 23 மற்றும் 24 தேதிகளில் இந்த மாநிலங்களில் கனமழை பெய்யும்

IMD Weather Report: தமிழகம், கேரளாவில் 5 நாட்களுக்கு மழை வெளுக்கப்போகிறது. மேலும் 5 மாநிலங்களுக்கு அலர்ட். நவம்பர் 24 வரை வானிலை எப்படி இருக்கும்? முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

லாலு குடும்பத்தில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: அரசியலில் இருந்து விலகுவதாக மகள் ரோகிணி அறிவிப்பு 

பாட்னா: ​ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து வில​கு​வ​தாக லாலு​வின் மகள் ரோகிணி பகிரங்​க​மாக அறி​வித்​துள்​ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலை​வர் லாலு பிர​சாத், ரப்ரி தம்​ப​தி​யருக்கு 7 மகள்​கள், 2 மகன்​கள் உள்​ளனர். இதில் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிர​தாப், மிசா பார​தி, ரோகிணி ஆகியோர் அரசி​யலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். Source link

20களில் குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லும் ஸ்ரீதர் வேம்பு! ராம்சரண் மனைவி பதிலடி..

Sridhar Vembu Marry Early Upasana Reply : நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா, சமீபத்தில் வெளியிட்டிருந்த பதிவிற்கு ZOHO நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கொடுத்திருக்கும் பதில், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்: டெட் டிராப் இ-மெயில் பயன்படுத்திய தீவிரவாதிகள்

புதுடெல்லி: டெட் டிராப் இ-மெ​யில்​களை தீவிர​வா​தி​கள் பயன்​படுத்​தி​யது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்​டு​வெடிப்​பில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது. Source link

ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால்… உச்ச நீதிமன்றம் முக்கிய விளக்கம்

Supreme Court: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

100 தோப்புக் கரணம் போட்டதால் 6-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று முன்தினம் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு தோளில் புத்தகப் பையுடன் 100 முறை தோப்புக் கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது. இதனால் வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் … Read more