நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம்: பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில் மறியல்

புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. காலியாக உள்ள அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் பணி நாட்கள் மற்றும் … Read more

பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட செல்போனில் 2 மடங்கு நேரம் செலவிடும் இந்திய குழந்தைகள்!

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஆசிஷ் கோப்ரகடே, எம்.ஸ்வாதி ஷெனாய் ஆகிய இருவரும் 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘கியூரியஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், லேப்டாப் அல்லது டி.வி. முன்னால் அதிகபட்சம் 12 மணி நேரம் செலவிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய குழந்தைகள் சராசரியாக 2.2 மணி நேரம், அதாவது கிட்டத்தட்ட 2 மடங்கு செலவிடுவதாக அவர்களின் … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் அறிமுகம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: உலக அளவில் ரயில் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பாளராக மாற வேண்டும் என்பதும் உள்நாட்டில் செலவு குறைந்த சரக்கு போக்குவரத்துக்கு முதுகெலும்பாக மாற வேண்டும் என்பதும் இந்திய ரயில்வேயின் நீண்டகால தொலைநோக்கு பார்வை. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல … Read more

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர். அப்போது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது … Read more

தீவிரவாதி ரானாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹாவூர் ரானாவை அமெரிக்காவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்தனர். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ஆக.13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் … Read more

“இதுதான் எங்கள் பாணி…” – கேன்டீன் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ விளக்கம்

மும்பை: உணவு கெட்டுப்போனதாகச் சொல்லி மும்பை எம்எல்ஏக்கள் கேன்டீன் ஊழியர்களை தாக்கியது குறித்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார். மும்பையில் எம்எல்ஏக்களுக்கான விடுதியில் உள்ள கேன்டீனில் நேற்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்பின்னர், கேன்டீனில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போனதாக சொல்லி வாக்குவாதம் செய்த சஞ்சய் கெய்க்வாட், அங்கிருந்த ஊழியர்களையும் கடுமையாக தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. இது குறித்து விளக்கம் … Read more

ஏமனில் கேரள நர்ஸுக்கு ஜூலை 16-ல் மரண தண்டனை: கடைசி முயற்சியில் ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’

சனா: கேரளாவின் பாலாக்காட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்டுவிட ‘சேவ் நிமிஷா பிரியா கவுன்சில்’ (Save Nimisha Priya Council) என்ற அமைப்பு இறுதி முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ‘இது எங்கள் இறுதி முயற்சி’ – ஏமன் நாட்டைச் சேர்ந்தவரான தலால் அப்டோ மஹ்தி என்பவரை நிமிஷா பிரியா கொலை செய்துவிட்டார் என்பதே குற்றச்சாட்டு. தலால் … Read more

11 பேரை காவு வாங்கிய கம்பீரா பாலம்… இனி 50 கி.மீ., சுத்தி தான் போகணும்!

Gujarat Bridge Collapse: குஜராத்தில் காம்பீரா பாலம் இடிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது தினமும் அப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்வோரின் நிலையும் பரிதாபமாகி உள்ளது.

கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?

பொதுத்​ துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக் ​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப் ​பெற வேண்​டும், பொதுத் ​துறை நிறு​வனங்​களில் காலிப்​ பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய – மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர வேண்​டும் என்​பன உள்​ளிட்ட 17 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் பரவலாக பாரத் பந்த் நடைபெற்றது. 10 மத்திய தொழிற்சங்கங்களின் … Read more

வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம்

பாட்னா: “வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செயல்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததுபோல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நடக்க அனுமதிக்கமாட்டோம்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் – special intensive revision of electoral rolls ) நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணி சார்பில் இன்று பாட்னா தேர்தல் அலுவலகம் நோக்கி … Read more