அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்காவிட்டால் அதுவே தனது கடைசி தேர்தல் – சந்திரபாபு நாயுடு உருக்கம்..!

2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்காவிட்டால் அதுவே தனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது வயோதிகத்தை பலர் விமர்சிப்பதாகவும், 72 வயதிலும் பிரதமர் மோடியைப் போல் தானும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். Source link

கோவாக்சினை விரைவாக வெளியிட அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?.. பாரத் பயோடெக் மறுப்பு

புதுடெல்லி:  கோவாக்சின் தடுப்பு மருந்தை அரசியல் அழுத்தம் காரணமாக அவசரகதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக வெளியாகி உள்ள தகவலை, பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்குதல் உச்சத்தில் இருந்தபோது, அதற்கான தடுப்பூசியை தயாரிப்பதில் ஒன்றிய அரசு தீவிர முனைப்பு காட்டியது. அதன் காரணமாக, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டும், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவாக்சின் தடுப்பூசியும் வேகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்குதலை தடுப்பதற்கான செயல்திறன், … Read more

வம்பை விலைக்கு வாங்கிய ராகுல் காந்தி!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை என்கிற பெயரில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல் காந்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹிங்கோலியில் பழங்குடியின மக்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசும்போது, ‘அந்தமான் சிறையில் இருந்தபோது சாவர்க்கர் ஒரு கடிதம் எழுதினார். அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம். அந்த கடிதத்தில் சாவர்க்கர் தன்னை விடுதலை செய்யுமாறு … Read more

பாஜவினரால் ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்; எந்த அழுத்தமும் இன்றி நானாகவே வேட்பு மனுவை வாபஸ் பெற்றேன்: காஞ்சன் ஜரிவாலா குஜராத்தில் பரபரப்பு

சூரத்: பாஜவினரால் ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், காஞ்சன் ஜரிவாலா தரப்பில் ஒரு வீடியோ வெளியானது. அதில், ‘இந்த விவகாரத்தில் பாஜவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நானாகத்தான் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வேட்பு மனுவை வாபஸ் பெற்றேன்’ என காஞ்சன் ஜரிவாலா விளக்கம் அளித்துள்ளார். இதனால் குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரு கட்ட … Read more

பிரதமர் மோடி உரையுடன் டெல்லியில் தொடங்குகிறது பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாடு!

டெல்லியில் நாளை தொடங்கும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பது குறித்த 3-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையை ஆற்றுகிறார். கடந்த 2018-ம் ஆண்டு பாரிசிலும், 2019-ம் ஆண்டு மெல்போர்னிலும் நடைபெற்ற இரண்டு மாநாடுகளிலும், ‘சர்வதேச நாடுகளில் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவிக்கு’ எதிரான விவாதங்களை முன்னெடுத்த நிலையில், 3-வது மாநாடானது ‘பயங்கரவாதத்திற்கு பணம் கிடையாது’ எனற தலைப்பில் டெல்லியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி, பயங்கரவாதத்திற்கான முறையான மற்றும் முறைசாரா நிதிகளின் பயன்பாடு, … Read more

அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலம் மூன்றாவது முறையாக நீட்டிப்பு.!

புலனாய்வு முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே. மிஸ்ராவின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது. அமலாக்கத்துறையில் ஒரு வருட சேவை நீட்டிப்பைப் பெற்ற முதல் நபராக எஸ்.கே.மிஸ்ரா ஆனார். இந்த பணி நீட்டிப்புக்கு முன், மத்திய விசாரணை அமைப்புகளின் தலைவர்கள் இரண்டு வருட பதவிக் காலம் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து ஒரு பதவியில் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை அவகாசம் வழங்க அரசாணை … Read more

மாலை போட்டு விரதம் இருப்பவர் போல் நடித்து தெலுங்கு தேசம் கட்சி உள்ளூர் தலைவரை கொலை செய்ய முயற்சி..!

ஆந்திர மாநிலத்தில் மாலை போட்டு விரதம் இருப்பவர் போல் வந்து தெலுங்கு தேசம் கட்சி உள்ளூர் தலைவரை வெட்டி கொலை செய்ய முயன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி நகர தெலுங்குதேச கட்சி பொறுப்பாளராக இருப்பவர் சேஷகிரிராவ். சம்பவத்தன்று காலை மாலைபோட்டு சாமியார் போல யாசகம் கேட்டு வந்த நபருக்கு சேஷகிரிராவ் அரிசி போடும்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டி விட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்த சேஷகிரிராவ் சிகிச்சை … Read more

நேபாளத்தில் 20ம் தேதி பொதுத்தேர்தல்; டார்ஜிலிங், உத்தரகாண்ட் எல்லைகளை மூட இந்தியா முடிவு

புதுடெல்லி: நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கு வங்கம் டார்ஜிலிங்கிலும், உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகர் மற்றும் சம்பாவத் பகுதிகளில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைகளை இன்று முதல் வரும் 20ம் தேதி வரை மூட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் வரும் 20ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மொத்தமுள்ள 275 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 138 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சியை பிடிக்கும். கடந்த 2017ம் ஆண்டு நடந்த … Read more

நளினி உள்பட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கான சதித் திட்டத்தில் பங்குபெற்ற குற்றத்துக்காக 31 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தால் நவம்பர் 11 அன்று விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பேரறிவாளனின் … Read more

கேரள மாநிலம் காசர்கோடு அருகே மாணவியை தூக்கி சாலையில் வீசிய கொடூரன் கைது..!

கேரள மாநிலம் காசர்கோட்டில், மதராசாவிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை அபுபக்கர் சித்திக் என்பவர் முரட்டுத்தனமாகத் தூக்கி சாலையில் வீசினார். அபுபக்கரை கைது செய்த போலீசார் எவ்வித முன்விரோதமும் இன்றி ஏன் மாணவியை அவ்வாறு தூக்கி வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவர் போதையில் அவ்வாறு செய்தாரா ? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். Source link