நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை! அரசிடம் பதில் கோரும் உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதியிடம், தேர்வில் பின்பற்றப்படும் சரியான நடைமுறை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் … Read more

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் கைரன் பொல்லார்ட்: ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கைரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். மும்பை அணிக்காக கடந்த 13 ஆண்டுகள் ஐபிஎல் தொடர்களில் விளையாடிய கைரன் பொல்லார்ட் எதிர்வரும் 2023 ஐ.பி.எல் தொடரிலும் அவர் விளையாடுவர் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொலார்ட். 13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய பொலார்ட், 5 முறை ஐபிஎல் கோப்பையை … Read more

சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு!

சிவசேனா கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே அணி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர்க்கொடி தூக்கினார். இதனால் பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த உத்தவ் தாக்கரே, … Read more

குஜராத் பாஜக தலைமையகத்தில் போராட்டம் 40 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: அமித் ஷாவின் சமரச பேச்சு தோல்வி

அகமதாபாத்: குஜராத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சித் தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே அமித் ஷாவின் சமரச பேச்சு தோல்வியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் சட்டப் பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை தொகுதிக்கு 178 வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தத் … Read more

ஜி-20 உச்சி மாநாடு | அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பாலி: பாலியில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துப் பேசினர். முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களான, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இந்தியா – அமெரிக்கா இடையே உத்திசார் கூட்டு செயல்பாட்டை தொடர்ந்து அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர். குவாட், ஐ2யூ2 போன்ற புதிதாக அமைக்கப்படும் நாடுகளின் குழுக்களில் … Read more

படுகுழி தோண்டும் ஷிண்டே; பாஜக உச்சக்கட்ட டென்ஷன்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் சட்டசபையில் பெரும்பான்மையை இழந்த முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் குழு மற்றும் பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் உள்ளனர். சிவசேனா கட்சியின் … Read more

நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால் ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்தி விடுவோம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..!!

கொல்கத்தா: நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் இருந்தால் ஜி.எஸ்.டி செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது தொடர்பாக ஓராண்டுக்கு முன் பிரதமரை நேரில் சென்று சந்தித்தேன். ஆனால் எந்த பயனும் இதுவரை இல்லை. எங்களின் பாக்கியை எங்களிடம் கொடுங்கள். இல்லையெனில் ஜிஎஸ்டியை ரத்து செய்யுங்கள் என்று கூறினார். மாநிலத்துக்கு சேரவேண்டிய வரி தொகையை நிறுத்தி வைத்து எங்களை மிரட்டாலம். மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் … Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். மாநாட்டின் இடையே, இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதுடன் அவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையேயான நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகளை எடுத்துக் கூறினார். இரு நாடுகளுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கும் “பாலி … Read more

அரசுடன் மோதல் எதிரொலி கேரள கவர்னர் மாளிகை முற்றுகை: ஒரு லட்சம் பேர் இன்று காலை பேரணியாக சென்றனர், சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா எம்பி பங்கேற்பு

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் மற்றும் ஒன்றிய அரசைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் இடதுசாரி  கூட்டணி கட்சிகள் சார்பில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் சமீப காலமாக மாநில அரசுடன் மோதல் போக்கை  கடைப்பிடித்து வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களை  நேரடியாக அவர் விமர்சித்து வருகிறார். தனது விருப்பத்திற்கு மாறாக  செயல்படும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து … Read more

”உங்க காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா? GST வரியை நிறுத்திவிடுவோம்” – மம்தா ஆவேசம்!

ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு மத்திய திட்டங்களின் கீழ் மேற்கு வங்க மாநிலத்துக்கு வர வேண்டிய பல நிலுவைத் தொகைகளை பாஜக தலைமையிலான அரசு முடக்கி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். அப்போது பழங்குடியினர் நலத்திட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, “100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி … Read more