'அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி' – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு; பாஜக மறுப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டி வருவதாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி உள்ளார். 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. விரைவில் தேர்தல் … Read more

வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதலில் உயர்நீதிமன்றத்துக்கு சென்று முறையீடுங்கள் என கூறி தலைமை நீதிபதி சந்திரசூட் வழக்கை தள்ளுபடி செய்தார்.    

பிஹார் அவலம் | 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தண்டனை ஐந்து உக்கி

பாட்னா: பிஹாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஊர் பஞ்சாயத்து வெறும் 5 உக்கிகளை தண்டனையாக வழங்கியுள்ளது. இந்தத் தண்டனை வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவ இது குறித்து பொதுமக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். கூடவே, பிஹார் அரசு இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். பிஹாரின் நவாடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மிட்டாய் வாங்கித்தருவதாகக் கூறி தனது … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிச.6ல் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு..!!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது.

குஜராத் தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் இவ்வளவு பேரா? – முதலிடம் எந்த கட்சிக்கு தெரியுமா?

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 21% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குஜராத் மாநில  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. … Read more

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதின்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 2015-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அனுப் பாரன்வால், பாஜக மூத்த தலைவர் … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி: மணீஷ் சிசோடியா புகார்

டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி நடப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புகார் அளித்துள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில் சதி நடக்கிறது என அவர் கூறினார்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்..!

பொது சிவில் சட்டம் என்பது ஜனசங்கம் காலத்தில் இருந்து பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆங்கில செய்தி சேனலின் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், “பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது ஜனசங்க காலத்தில் இருந்து மக்களுக்கு பாஜக அளித்து வரும் வாக்குறுதி ஆகும். எனவே, … Read more

அரசுக்கு சொந்தமான ஹோட்டல் அம்பானிக்கு கைமாறுகிறது..!

இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலை, முகேஷ் அம்பானி வாங்குவார் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான, பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள அசோக் ஹோட்டல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலின் விற்பனை விலையாக 7,409 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் மட்டுமின்றி, இந்திய … Read more

இந்தியப் பார்வையில் வரலாற்றை திருப்பி எழுதுங்கள்; மத்திய அரசு உதவி செய்யும்: அமித் ஷா

புதுடெல்லி: வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்றை திருப்பி எழுத வேண்டும். இந்திய பின்புலத்தில் எழுதப்படும் வரலாற்றுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் நேற்று அசாம் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “வரலாறு படித்த மாணவன் நான். நம் நாட்டின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை. அது சிதைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் அந்தத் தவற்றை இப்போது சரி செய்ய … Read more