சபரிமலையில் 6 நாட்களில் 2.61 லட்சம் பேர் தரிசனம்: கேரள தேவசம் போர்டு அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார். மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் … Read more

மனைவியை கொன்று துண்டு துண்டாய் வெட்டி வீசிய கணவர் – உ.பி.யில் நடந்த கொடூரம்

உத்தரப் பிரதேசத்தில் மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள குலாரிஹாவ் பகுதியில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக ராம்பூர் கலன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை … Read more

பாஜக போட்டி வேட்பாளர்கள் 12 பேர் குஜராத்தில் சஸ்பெண்ட்

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் பாஜக பிரமுகர்கள் 12 பேர் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல், பரிசீலனை, மனு திரும்பப் பெறுதல் ஆகியவை முடிந்துள்ளன. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 1 வாரமே உள்ளது. 6 முறை எம்எல்ஏ: இந்நிலையில் டிச.5-ம் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில்பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு … Read more

நடுகாட்டில் உடலுறவு… பிரிக்க முடியாமல் கிடந்த உடல்கள்… மந்திரவாதி கைது – முழு பின்னணி!

வனப்பகுதியில் நிர்வாணமாக கிடந்த இரண்டு உடல்களை போலீசார் கடந்த வாரம் கைப்பற்றிய நிலையில், அந்த கொலையின் பின்னணி குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். 

மநீம தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மநீம தலைவர் கமல்ஹாசன், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் வீடு திரும்புவார் எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம்செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. … Read more

திகார் சிறையில் தரமான சாப்பாடு… 8 கிலோ ஏறிட்டாரு…: அமைச்சரின் அடுத்த வீடியோ வெளியானது

புதுடெல்லி: திகார் சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தரமான உணவு கிடைப்பதால் 8 கிலோ எடை கூடிவிட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சிறை விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்வதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக புதுபுது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. முதலில் … Read more

நாட்டையே உலுக்கிய சம்பவம்…மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா… பிடிப்பட்ட மாணவர் செல்போனில் 1,200 வீடியோக்கள்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒசகெரேஹள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள கழிவறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிகள் சென்று இருந்தனர். அப்போது மாணவிகளின் கழிவறையில் ஒரு வாலிபர் நின்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் … Read more

இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வாரம் அவகாசம்

புதுடெல்லி: இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992, சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்று கூறுகிறது. இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், அரசியல் சாசனத்தின் … Read more

தமிழக அரசு எழுத்துப்பூர்வ அறிக்கை ஜல்லிக்கட்டு எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: ‘ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. … Read more