குஜராத்தில் சீட் கிடைக்காத கோபம் பாஜவுக்கு குழிபறிக்கும் எம்எல்ஏக்கள்: சுயேச்சைகளை தூண்டிவிட்டு போட்டி 12 அதிருப்தியாளர்கள் 6 ஆண்டு நீக்கம்
சூரத்: குஜராத்தில் பாஜ சார்பில் போட்டியிட சீட் கிடைகாததால், கட்சிக்கு எதிராக குழிபறிக்கும் வேலையில் எம்எல்ஏக்கள் இறங்கி உள்ளனர். அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்ட 12 பேர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளதால், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more