ஸ்வர்ணரேகா நதி: இது இந்தியாவின் ‘தங்கம்’ பாயும் நதி!

ஸ்வர்ணரேகா நதி: ஸ்வர்ணரேகா நதியில் தங்கம் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகளை அறிந்துகொள்ள இவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

லெதர் ஃபேக்டரி ஊழியரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 பெண்கள்: பஞ்சாபில் பரபரப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், நான்கு பெண்கள் கூடி ஒரு நபரை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த அதிர்ச்சிகர சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பாக புகார் எதுவும் கொடுத்திராத அந்த பாதிக்கப்பட்ட நபர், உள்ளூர் ஊடகத்திடம் பேசியிருக்கிறார். அதில், ஜலந்தரைச் சேர்ந்த அந்த நபர் திருமணமாகி குழந்தையுடன் வசித்து வருவதாகவும், தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அவர், கடந்த திங்களன்று வேலை … Read more

உயர் சாதி இட ஒதுக்கீடு தீர்ப்பு – மறு ஆய்வு மனு தாக்கல்

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். உயர் சாதி ஏழைகளுக்கான 10%இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

ஒடிசா மாநிலம் ஜாஜாப்பூர் அருகே உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து

ஒடிசா மாநிலம் ஜாஜாப்பூர் அருகே உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 குழுக்களாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி: போதைக்கு காசு தராததால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் குத்திக் கொன்ற போதை ஆசாமி!

போதை பழக்கத்துக்கு அடிமையான வாலிபன் தனது பெற்றோர், சகோதரி, பாட்டி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கத்தியால் குத்திக் கொன்ற கொடூர நிகழ்வு டெல்லியில் அரங்கேறியிருக்கிறது. தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபன்தான் கேசவ். குர்கானில் பணியாற்றி வந்த வேலையை விட்ட, இந்த கேசவ் நடந்து முடிந்த தீபாவளியில் இருந்தே வீட்டில்தான் இருந்து வருகிறார். குடி மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமையானதால் கேசவனை அவரது குடும்பத்தினர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். சிகிச்சை … Read more

தெலங்கானாவில் பரபரப்பு; அமைச்சர் வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்றும் ஐ.டி. ரெய்டு: மருத்துவமனையில் அமைச்சர் மகன் அனுமதி

திருமலை: தெலங்கானாவில் அமைச்சர் மல்லாரெட்டி வீடு உள்பட 50 இடங்களில் 2வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது, அமைச்சரின் மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) ஆட்சி செய்து வருகிறது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மல்லாரெட்டி. தற்போது ரங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் … Read more

சதாம் உசைன் போல இருக்கிறார் ராகுல் அசாம் முதல்வர் கேலி! – காங்கிரஸ் பதிலடி!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா இன்று மத்திய பிரதேசத்தில் நுழைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 12 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, அதன்பின்பு ராஜஸ்தானுக்குள் செல்ல உள்ளனர். நடைபயணத்தின் வழியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையின் 77வது நாள். இந்நிலையில், ராகுல் காந்தி தாடி வைத்த தோற்றத்தில் இருப்பதால், அவரை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுடன் ஒப்பிட்டு அசாம் … Read more

ராகுல் காந்தியின் தோற்றத்தை சதாம் உசேன் உடன் ஒப்பிட்ட அசாம் முதல்வருக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதனால், அவர் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் கொஞ்சம் தாடி வைத்துள்ளார். இந்தச் சூழலில் அந்தப் பயணத்தை கேலி செய்தும், சதாம் உசேன் போல ராகுல் காந்தி தோற்றம் அளிக்கிறார் எனவும் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை பணியை ஹிமந்த பிஸ்வா மேற்கொண்டு வருகிறார். … Read more

‘கண்டுபிடித்து கொல்’: பாக்., ட்ரோன்களை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்!

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல், தீவிரவாதிகளின் ஊடுருவல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எத்தனை ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தை நடந்தாலும் பாகிஸ்தான் தரப்பு அதனை மீறி வருவதாகவே குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வகையில், இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் குறிப்பாக பஞ்சாபில் ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் வேவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதனை எதிர்கொள்ளும் வகையில், … Read more