சி.எம் பதவி கொடுத்த மோடி… பிரசாந்த் கிஷோர் உடைக்கும் அரசியல் சீக்ரெட்!

மத்தியில் ஆளும் பாஜகவும் சரி, பிராந்திய கட்சிகளும் சரி. அனைவரது இலக்கும் 2024 மக்களவை தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த முடியுமா? காங்கிரஸின் திட்டம் என்ன? மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் அரசியல் கணக்கு வெற்றி பெறுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன. ஜன் சூரஜ் யாத்ரா இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக தனது அரசியல் கணக்கை தொடங்கியிருப்பது பற்றி பிரசாந்த் கிஷோர் முக்கியத் … Read more

மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை

டெல்லி: மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேகதாது வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தை ஏற்க முடியாது. உச்ச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மேகதாது குறித்து விவாதிக்க தடை வேண்டும் என … Read more

“இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என, 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கிய பின்னர் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் `ரோஸ்கர் மேளா திட்டத்தின்’ 2வது கட்டமாக, இன்று குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர நாடு முழுவதும் 45 இடங்களில் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர … Read more

விபத்தில் சிக்கி உயிரிழந்த சோஷியல் மீடியா பிரபலம்!!

சமூக ஊடக பிரபலமான ரவுடி பாட்டீ என்று அழைக்கப்படும் ரோஹித் பாட்டீ என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். புலந்த்ஷாஹரைச் சேர்ந்த ரோஹித், கிரேட்டர் நொய்டாவின் சி செக்டரில் வசித்து வந்தார். இவர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பிரபலமாக இருந்து வந்தார். அவரது வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று இரவு ரோஹித் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் ஒரு விருந்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. திரும்பும் வழியில் சுகாத்பூர் சுரங்கப்பாதை … Read more

காஷ்மீர் | எல்லையில் ஊடுருவல் முயற்சி: ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் அருகே தனித்தனியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று எல்லைப் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜம்முவில் உள்ள அர்னியா பகுதியிலும், ராம்கர் மாவட்டத்தில் உள்ள சம்பா பகுதியிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றதை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கண்டறிந்தனர். இதில் ஜம்முவின் அர்னியா பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் மிகவும் ஆக்ரோஷமாக எல்லையில் இருக்கும் பென்சிங் வேலியை … Read more

ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

நியூடெல்லி: ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரிப்பதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷ்ரத்தாவின் நண்பர்களான, லஷ்மண், ராகுல் ராய், கோட்வின், ஷிவானி மற்றும் அவரது கணவர், ஷ்ரத்தாவும், அஃப்தாப்பும் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் ஜெயஸ்ரீ மற்றும் ஷ்ரத்தாவை … Read more

இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி : இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா அவரது காதலன் புனவல்லாவுடன் டெல்லியில் தங்கி வேலை பார்த்து வந்தார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் புனவல்லா, காதலி ஷ்ரத்தாவை கொலை செய்துள்ளார். 

7th Pay Commission: புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பம்பர் உயர்வு

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அபரிமிதமான லாபத்தைக் கொண்டு வரப் போகிறது. ஊழியர்ககளின் கொண்டாட்டங்கள் அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய ஊழியர்களின் நன்மைக்காக மோடி அரசு மொத்தம் 3 முடிவுகளை எடுக்கக்கூடும். இவற்றில் மிகப்பெரிய நல்ல செய்தி ஊதியம் தொடர்பானதாக இருக்கும். இதற்கான அறிகுறிகள் வந்ததிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  நீண்ட காலமாக, 2023 ஆம் ஆண்டில் … Read more

இ- காமர்ஸ் தளங்களில் போலி ரிவ்யூஸ் கண்காணிக்க நடவடிக்கை – மத்திய அரசு

நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில், இ-காமர்ஸ் இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத மதிப்பீடுகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களை விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பின் அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங் பெரிதும் அதிகரித்தது. இதைப்  பயன்படுத்தி பல போலி நிறுவனங்களும் கிடுகிடுவென முளைத்தன. தரமற்ற பொருள்களை போலியான ரேட்டிங், ரிவ்யூ வழங்கி விற்பனை செய்வதனால், நம்பி பொருள்களை வாங்கும் மக்களுக்கு நஷ்டமும், ஏமாற்றமும் ஏற்படுகிறது. இதனை … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக் பெரிய பை ஒன்றை தோளில் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!

கர்நாடகா: மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷாரிக் பெரிய பை ஒன்றை தோளில் சுமந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் ஷாரிக் தோளில் பெரிய பையை சுமந்து கொண்டு தொப்பி அணிந்தவாறு செல்கிறார். குண்டு வெடிப்பு நடந்த நாகோரி பகுதிக்கு செல்லும் முன் பேருந்து நிலையம் அருகே இருந்த மதுபான கடையில் பதிவான சிசிடிவி காட்சி வெளியானது. ஷாரிக் தோளில் சுமந்து செல்லும் பையில் குக்கர் குண்டு இருந்ததா? … Read more