நமது அரசியல் சாசனமே நமது மிகப்பெரிய பலம்: டெல்லியில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

டெல்லி: நமது அரசியல் சாசனமே நமது மிகப்பெரிய பலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். நமது அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கை. இளைஞர்கள் அதிக அளவில் விவாதங்களில் பங்கு கொண்டு இந்திய அரசியல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் மோடி தெரிவித்தார்.

26/11 Attack Mumbai: இந்தியாவை உலுக்கிய மும்பை தாக்குதல், 14-ம் நினைவு தினம் இன்று

26/11 மும்பை தாக்குதல்: 21ஆம் நூற்றாண்டில் பயங்கரவாதம் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி என்பதை அனைத்து இந்தியர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் நினைவூட்டும் ஒரு தேதியாக நவம்பர் 26 உள்ளது. 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், தாக்குதலின் காயங்கள் இன்னும்  நாட்டு மக்களின் இதயங்களில் அப்படியேதான் உள்ளன. இந்த தாக்குதல் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக நாடுகள் “பயங்கரவாதம்” என்ற அச்சுறுத்தலை ஒப்புக் கொண்டன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் தாக்குதல், நமது தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள … Read more

டெல்லி பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் கெஜ்ரிவால் அரசு ரூ.1,300 கோடி ஊழல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு பரிந்துரை

புதுடெல்லி: டெல்லியில் அரசு பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து ‘சிறப்பு புலனாய்வு அமைப்பு ‘ விசாரணை நடத்த, லஞ்ச  ஒழிப்பு இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில்  முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2015ல்  193  பள்ளிகளில் 2,405 ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததால், சிறப்பு ஏஜென்சி மூலம்  விரிவான விசாரணை நடத்த … Read more

"ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல; கொலீஜியம் அதற்கு விதிவிலக்கல்ல" – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடெல்லி: ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்ல. அதற்கு கொலீஜியமும் விதிவிலக்கல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தை ஒட்டி டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பார் கூட்டமைப்பு சார்ப்பில் விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்லது. அதற்கு கொலீஜியம் முறை மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால் கருத்து வேறுபாடுகளோ, … Read more

2018 – 2019ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரணமாக வழங்கிய அரிசிக்கான நிதியை வழங்க கேரளத்துக்கு ஒன்றிய அரசு கெடு..!!

டெல்லி: 2018 – 2019ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிவாரணமாக வழங்கிய அரிசிக்கான நிதியை வழங்க கேரளத்துக்கு ஒன்றிய அரசு கெடு விதித்துள்ளது. கேரள அரசு உடனடியாக நிதியை வழங்காவிட்டால் பேரிடர் மீட்பு நிவாரணத்துக்கான நிதி குறைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கெடு விதித்ததை அடுத்து உடனடியாக நிதியை விடுவிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

9 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV – C54 – முழு விவரம்!

ஒரு புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை PSLV C54 ஏந்தி செல்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:56க்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர். அகலம் 4.8 மீட்டர். 321 டன் எடை கொண்டது. இது PSLV XL வகையைச் சேர்ந்த ராக்கெட் ஆகும். நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில், முதல் அடுக்கில் புவிநோக்கு செயற்கைக்கோள் உட்பட … Read more

தெலங்கானா அமைச்சர் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரியை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை

ஹைதராபாத்: தெலங்கானா மாநில வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாரெட்டியின் ஹைதராபாத் வீட்டில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து 48 மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், சோதனையின் போது கொண்டு சென்ற லேப்டாப் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் அமைச்சர் மல்லாரெட்டி மீது ஐடி துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன லேப் டாப்பை அமைச்சரின் வீட்டில் இருந்து கொண்டு வந்து … Read more

Video : 23 வயது இளம்பெண்ணுக்கு மாரடைப்பு… சோகத்தில் முடிந்த திருமணம்!

தற்போது இளம் வயதிலேயே பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. உணவு முறை மாற்றத்தில் இருந்து பல்வேறு காரணங்கள் மாரடைப்பு மரணங்களுக்கு பின்னணியாக உள்ளன.  அந்த வகையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் அருகே 23 வயதே ஆன இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் குந்தபுரா மாவட்டத்தின் பஸ்ரூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்னா லீவிஸ் (23). இவர் கடந்த நவ. 23ஆம் தேதி, உடுப்பி மாவட்டத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமணத்தில் … Read more

பண மதிப்பிழப்பு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்துக்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு

புதுடெல்லி: ‘ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எந்த நோட்டையும் பண மதிப்பிழப்பு செய்வதற்கான அதிகாரம் அரசு உள்ளது என்றும், இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது ’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று  பிரதமர் மோடி அறிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், … Read more

மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு | என்ஐஏ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு – கர்நாடக உள்துறை அமைச்சர் தகவல்

பெங்களூரு: மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு வில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37), அதில் பயணித்த முகமது ஷரீக் (24) ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மங்களூரு போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் விசாரித்து வருகின்றனர். என்ஐஏ … Read more