சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் நேற்று ஞாற்றுகிழமை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. … Read more

முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர்: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து

பனாஜி: கோவா மாநிலம் பனாஜியில் பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எழுத்தாளருமான சசி தரூர் பேசியதாவது. 1920, 30, 40-களில் பெண்களும் பங்கேற்ற கூட்டங்களில் அம்பேத்கர் பேசி உள்ளார். அது இப்போது ஆண் அரசியல்வாதிகளின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. நாட்டின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கராகத்தான் இருக்கக்கூடும். கட்டாய திருமணத்துக்கு சம்மதிக்கக் கூடாது என பெண்களை அவர் வலியுறுத்தினார். திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போட வேண்டும் … Read more

மீண்டும் ஷாக்… காதலியை 6 துண்டுகளாக வெட்டிய இளைஞர் – குடும்பமும் உடந்தை!

உத்தரப் பிரதேசத்தின் அசாம்கர் நகருக்கு அருகே உள்ள பஸ்சிமி கிராமத்தின் கிணற்றில் கடந்த நவ. 15ஆம் தேதி ஒரு உடல் கிடப்பதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு அவர்கள் விசாரணை நடத்தினர்.  அதில், உயிரிழந்தவர் ஆராதனா என்ற இளம்பெண் என அடையாளம் காணப்பட்டார். அவரை கண்டெடுத்தபோது, அவர் அரை நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் உடல் கிடைப்பதற்கு இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.  … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு இன்று விசாரணை நடைபெற உள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. … Read more

குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

அகமதாபாத்: குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி நேற்று வழிபட்டார். குஜராத் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி குஜராத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். அருணாச்சலின் இடா நகர், உ.பி.யில் உள்ள வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் அவர் குஜராத்துக்கு வந்தார். அவரை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில், … Read more

இளம் பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய கொலையாளிடம் உண்மை கண்டறியும் சோதனை!

டெல்லியில் இளம் பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய ஆப்தாப்பிடம் இன்று உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றி கூறும் ஆப்தாபிடம் சோதனை நடத்த டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவனிடம் டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது. உண்மை கண்டறியும் சோதனையின் போது தடயவியல் குழு நேரில் இருப்பது கட்டாயமாகும். இதனால் தடயவியல் … Read more

விவசாயிகளின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றவில்லை: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை பாஜ அரசு நிறைவேற்றவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டினார். கடந்த 2020ம் ஆண்டு  சர்ச்சைக்குரிய வேளாண் சட்ட மசோதாவை ஒன்றிய  அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தினர். ஓராண்டாக நீடித்த போராட்டத்தின் போது பல்வேறு காரணங்களால் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தனர். இதையடுத்து, கடந்த நவம்பர் 19ம் தேதி வேளாண் சட்டம் வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்கள் … Read more

திருமணம் குறித்து பேச அப்தாப் வீட்டுக்கு சென்ற போது ஷிரத்தா பெற்றோரை அவமானப்படுத்திய குடும்பத்தினர்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஷிரத்தா கொலை வழக்கில் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷிரத்தாவும், அப்தாப்பும் ஒன்றாக வாழ்ந்து வந்ததால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஷிரத்தாவின் பெற்றோர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக பேசுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அப்தாப் வீட்டுக்கு ஷிரத்தாவின் தந்தை விகாஸ் வால்கர், தாய் ஹர்சிலா ஆகியோர் சென்றுள்ளனர். ஆனால் ஷிரத்தாவின் குடும்பத்தை அவமானப்படுத்தியதுடன், இனிமேல் தங்கள் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டாம் எனவும் கூறியுள்ளனர். இந்த திருமணம் நடந்திருந்தால், ஷிரத்தாவுக்கு இந்த … Read more

மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் : கர்நாடக காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மங்களூரில் ஆட்டோவில் நிகழ்த்தப்பட்டது குண்டுவெடிப்பு என்றும், இது தன்னிச்சையானது அல்ல மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது. மங்களூரில் ஆட்டோவில் குண்டு வெடித்து சிதறிய இடத்தை கர்நாடக காவல்துறை ஏடிஜிபி அலோக் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே தாக்குதலின் நோக்கம் என்றும், அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். கோவை உக்கடத்தில் நிகழ்த்தப்பட்ட … Read more

பீகார் மாநிலத்தில் சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரிய … Read more