சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்: 8 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் 8 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த இரு வருடங்களுக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் நடைதிறந்த 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் … Read more

பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி செய்வது மிகவும் ஆபத்தானது: அமித் ஷா

புதுடெல்லி: பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி செய்வது மிகவும் ஆபத்தானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு நிதி உதவி மறுத்தல் எனும் தலைப்பிலான 2 நாள் கருத்தரங்கம் புதுடெல்லியில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் அமித் ஷா ஆற்றிய நிறைவுரை: பயங்கரவாதம் என்பது ஜனநாயகம், மனித உரிமை, பொருளாதார முன்னேற்றம், உலக அமைதி ஆகியவற்றுக்கு எதிரானது. பயங்கரவாதம் வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது. பயங்கரவாதத்தைவிட அதற்கு நிதி உதவி … Read more

'தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு உ.பி.,யில் பிரதிபலிக்கிறது' – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே ஆண்டுகளில் கணக்கிட முடியாத பந்தம் உள்ளது என்றும், தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை உத்தர பிரதேசத்தில் பிரதிபலிக்கிறது என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார். வாரணாசியில் இன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு, வரவேற்புரை ஆற்றிய அவர், புனித பூமியான வாரணாசியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் … Read more

சாலையோரம் கடை போட்டிருந்த தந்தையை போலீஸ்காரர் அறைந்ததால் நீதிபதியான மகன்!: பீகார் இளைஞனின் வெற்றிக் கதை

சஹர்சா:டெல்லியில் சாலையோரம் கடை போட்டிருந்த தந்தையை போலீஸ்காரர் ஒருவர் அறைந்ததால், விடாமுயற்சியுடன் போராடி அவரது மகன் நீதிபதியான வெற்றிக் கதை பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் சத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் யாதவ், கடந்த சில ஆண்டுகளுக்கு வறுமையின் காரணமாக டெல்லிக்கு குடிபெயர்ந்தார். அங்கு சாலையோரம் கடை அமைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒரு நாள் போலீஸ்காரர் ஒருவர், சாலையோரம் கடை போட்டதற்காக சந்திரசேகர் யாதவை அறைந்தார். அதனை அவரது மகன் கமலேஷ் குமார் … Read more

தோழியை நம்பிய பெண்ணுக்கு காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் மாடலிங் செய்து வருகிறார். இவருக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த டிம்பிள் லம்பா என்ற பெண் அறிமுகமானார். இருவரும் அவ்வப்போது ஷாப்பிங், அவுட்டிங் செல்வது வழக்கம். சம்பவத்தன்றும் ராஜஸ்தான் தோழி, இளம்பெண்ணை பார்ட்டி ஒன்றிற்கு அழைத்துள்ளார். இவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, இருவரும் சேர்ந்து கொச்சி எம்.ஜி சாலையில் உள்ள பாருக்கு சென்றனர். அங்கே டிம்பிள் லம்பாவுக்கு தெரிந்த விவேக், சுதீப், நிதின் ஆகிய 3 நண்பர்கள் … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிக்கை; அமலாக்கத்துறை அதிரடி.!

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி, எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு, 106 பேர் கைது செய்யப்பட்டனர். ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என அழைக்கப்பட்ட இந்த மெகா சோதனையில், தீவிரவாத குழுக்களுக்கு … Read more

3% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொமேட்டோ நிர்வாகம் முடிவு

ஹரியானா: பணியில் திறன் காட்டாத 100 ஊழியர்களுக்கு மேல் பணி நீக்கம் செய்ய சொமேட்டோ நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொமேட்டோ நிர்வாகம் இந்த ஆண்டு 2வது காலாண்டில் 2.51 பில்லியன் அளவுக்கு இழப்பை சந்தித்ததால் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை கண்டு வியப்பதாக இளையராஜா பேச்சு!!

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுடன், தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா திரைப்பட பாடலான … Read more

எப்படி மோடிக்கு இது தோன்றியது: வியந்த இளையராஜா!

தமிழகத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் (காசி) இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வாரணாசியில் ஒரு மாத காலம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 11ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த சங்கமத்தை … Read more

பாரதியாரின் கனவை நனவாக்குவதுதான் காசி தமிழ் சங்கமம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருக்கும் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாசரத்துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். மேலும் திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமரால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன் … Read more