இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக உடலில் களிமண்ணை பூசிக் கொண்ட உத்தரகாண்ட் முதல்வர்: அடையாளம் தெரியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி

டேராடூன்: இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக உடல் முழுவதும் களிமண்ணை பூசிக் கொண்ட உத்தரகாண்ட் முதல்வர்  புஷ்கர் சிங் தாமியின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சம்பாவத் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தனக்பூர் கிராமத்திற்கு சென்றார். இந்த கிராமம் நேபாள எல்லையை ஒட்டி உள்ளது. ‘நவயோக் சூர்யோதயா சேவா சமிதி’ என்ற அமைப்பு நடத்திய இயற்கை மருத்துவம் மற்றும் நவயோக நிகழ்ச்சியில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார். அங்கு … Read more

குடியரசுத்தலைவர், ஐயப்பனுக்கு மட்டுமே இந்த சிறப்பு! சபரிமலை சன்னிதானம் குறித்த அரிய தகவல்!

இந்தியாவில் குடியரசுத் தலைவரை அடுத்து சபரிமலை சன்னிதானத்திற்கு சொந்த அஞ்சல் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இரண்டு பேருக்கு மட்டுமே சொந்த அஞ்சல் குறியீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் இரண்டு பேருக்கு மட்டுமே சொந்த அஞ்சல் குறியீடு (பின் கோடு) உள்ளது. அதில் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவர். மற்றொருவர் சபரிமலை ஐயப்பன் என்றால் அது எல்லோருக்கும் விழியுயர்த்தி ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் தான். இந்திய ஜனாதிபதிக்கு அடுத்து ஸ்ரீ சபரிமலை ஐயப்பன், தனது சொந்த அஞ்சல் குறியீட்டை … Read more

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிற்கும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையே பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஆன்மிக, கலாசார தொடர்பை கொண்டாடும் நோக்கில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் இருந்து 12 குழுக்கள் காசிக்கு செல்ல திட்டமிடப்பட்டு, முதல் குழு கடந்த 16 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இக்குழு காசி சென்றடைந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் … Read more

தேர்தல் நேரத்தில் தான் இந்துக்களுக்கு ஆபத்து என கூறுவார்கள்; பரூக் அப்துல்லா காட்டம்.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அந்தவகையில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக … Read more

மலைச்சாலையில் கார் கவிழ்ந்து உத்தரகாண்டில் 12 பேர் பலி

டேராடூன்: ஜோஷிமாத் பகுதியில் மலைச்சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் பல்லா ஜாக்கோல் என்ற கிராமத்துக்கு நேற்று மாலை ஒரு காரில் 16 பேர் பயணித்தனர். காருக்குள் இடநெருக்கடியுடன் சென்ற அவர்களில் சிலர் காரின் மேற்பகுதியிலும் அமர்ந்து பயணித்தனர். இந்நிலையில் ஜோஷிமாத் பகுதியில் உர்காம் என்ற இடத்தின் மலைச்சாலையில் கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து … Read more

கல்லூரி ஆய்வகத்தில் வாயு கசிவு.. 30 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

கல்லூரி ஆய்வகத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் செகந்திராபாத் பகுதியில் உள்ள மேற்கு மாரேட்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளை அப்பகுதி மக்களின் உதவியுடன் கல்லூரி ஊழியர்கள் … Read more

காசி தமிழ் சங்கமம்: வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்பு!

தமிழகத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் (காசி) இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வாரணாசியில் ஒரு மாத காலம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 11ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த சங்கமத்தில் … Read more

காசியை போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும் பெருமையும் வாய்ந்தது: பிரதமர் மோடி

காசி: பல வேற்றுமைகளை கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவை கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. காசியை போன்று தமிழ்நாடும் மகத்தான பழமையும் பெருமையும் வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

டெல்லியில் தொடங்கியது பனிக்காலம் – இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவு

டெல்லியில் குளிர் காலம் தொடங்கிய நிலையில் இன்று காலை 9℃ ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லியில் பொதுவாக அக்டோபர் மாதம் வெயிலின் தாக்கம் குறைந்து நவம்பர் மாதங்களில் குளிர்காலம் உச்சத்துக்கு செல்ல தொடங்கும் கடந்த சில வாரங்களாகவே வெப்பநிலை குறைந்து வந்த நிலையில்  இன்று டெல்லியில்  9℃ ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.  வழக்கமாக டிசம்பர்-பிப்ரவரி முதல் வரை கடும் குளிர் நீடிக்கும் நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலே குளிர் அதிகரித்து காணப்படுகிறது. இது இந்த பருவத்திற்கான … Read more

மக்கள் தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகள் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனு நிராகரிப்பு

புதுடெல்லி: நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தைகள் திட்டத்தைக் கொண்டு வரக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வனி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் அஸ்வனி குமார் கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைத் … Read more