சினிமா பாடல் பயன்படுத்திய விவகாரம் காங். டிவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் உரிய அனுமதியின்றி கேஜிஎப்-2 திரைப்பட பாடலை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபயணத்தை ராகுல் நிறைவு செய்துள்ளார். இதனிடையே, ராகுலின் கர்நாடக நடைபயணத்தின் வீடியோக்கள் காங்கிரஸ் … Read more