குடித்துவிட்டு வகுப்பறையில் ஒய்யாரமாக தூங்கிய பிரின்சிபல் – வைரலாகும் வீடியோ

மகாராஷ்டிராவில் பள்ளியில் மது அருந்திவிட்டு வகுப்பறையிலேயே பிரின்சிபல் படுத்து உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் மேக்லாத் பகுதியிலுள்ள பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மதுபோதையிலிருந்த பிரின்சிபல், சட்டையை கழற்றிய நிலையில், வகுப்பறையின் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இணையங்களில் பரவிய நிலையில் பிரின்சிபல் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பலரும் பல கேள்விகளை எழுப்பி … Read more

மத்திய பிரதேச வனப்பகுதியில் புலிகள் மீது கற்கள் வீசுவதாக நடிகை புகார்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

போபால்: வான் விஹார் வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் மீது சிலர் கற்களை வீசுவதாக நடிகை  ரவீனா டாண்டன் வெளியிட்ட வீடியோ, மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சினிமா பட ஷூட்டிங்கிற்காக கடந்த வாரம் போபால் சென்றடைந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வான் விஹார் வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் மீது சுற்றுலா பயணிகள் கல் எறிந்து தாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக ரவீனா டாண்டன் வெளியிட்ட வீடியோ பதிவில், … Read more

"நான் ராமர், சந்திரபாபு ராவணன்" – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி பேச்சு

தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுவை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ‘இன்றைய ராவணன்’ என விமர்சித்துள்ளது பேசுப் பொருளாகி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன், ’ என்டிஆரை முதுகில் குத்தி சந்திரபாபு நாயுடு எப்படி ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதை மக்களுக்கு நினைவூட்டி, அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் நாளுமன்ற தேர்தலில் சந்திரபாபுக்கு பை பை … Read more

மாதம் ரூ.15,000 செலவு செய்தும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 கிளிகள் திருட்டு: குஜராத் போலீசார் வழக்குபதிவு

சூரத்: குஜராத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இரண்டு வெளிநாட்டு கிளிகள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத் அடுத்த ஜஹாங்கிர்புரா பகுதியில் விஷால் பாய் படேல் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் பறவைகள் பண்ணையை நடத்தி வருகிறார். மற்ற பறவைகளுடன் வெளிநாட்டு இனத்தை சேர்ந்த இரண்டு கிளிகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அந்த கிளிகள் இரண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு போனது. … Read more

வேறொருவருடன் திருமணமான நிலையில் காதலனை தேடி ஓட்டம் பிடித்த காதலி: இரவோடு இரவாக மீண்டும் தாலி கட்டிய விநோதம்

பாட்னா: பீகார் மாநிலம் பத்த நயா தோலா பகுதியைச் சேர்ந்த சுஜித் குமார் (21) என்பவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ரேகா குமாரி (19) என்பவரை காதலித்து வந்தார். இந்த விஷயம் ரேகா குமாரியின் வீட்டிற்கு தெரியவந்தது. அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேகா குமாரிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்தனர். இருந்தும் ரேகா குமாரியின் மனம் தன்னுடைய காதலன் சுஜித் குமாருடன் இருந்தது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். … Read more

'விலையை கேட்டதும் தலைக்கேறியது போல இருக்கு'- மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த கேரளா!

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு (IMFL)விற்பனை வரியை 4% உயர்த்த கேரளா மாநில அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளதது. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் , மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர வாய்ப்புள்ளது என கேரள கலால் துறை அமைச்சர் எம்.வி. கோவிந்தன் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது 4% வரி உயர்வை கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதது. இதனால் கேரளாவில் முதற்கட்டமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு … Read more

ஸ்வர்ணரேகா நதி: இது இந்தியாவின் ‘தங்கம்’ பாயும் நதி!

ஸ்வர்ணரேகா நதி: ஸ்வர்ணரேகா நதியில் தங்கம் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.

இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது தொடர்பான கோப்புகளை சமர்ப்பிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகளை அறிந்துகொள்ள இவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

லெதர் ஃபேக்டரி ஊழியரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 பெண்கள்: பஞ்சாபில் பரபரப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், நான்கு பெண்கள் கூடி ஒரு நபரை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த அதிர்ச்சிகர சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பாக புகார் எதுவும் கொடுத்திராத அந்த பாதிக்கப்பட்ட நபர், உள்ளூர் ஊடகத்திடம் பேசியிருக்கிறார். அதில், ஜலந்தரைச் சேர்ந்த அந்த நபர் திருமணமாகி குழந்தையுடன் வசித்து வருவதாகவும், தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அவர், கடந்த திங்களன்று வேலை … Read more

உயர் சாதி இட ஒதுக்கீடு தீர்ப்பு – மறு ஆய்வு மனு தாக்கல்

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். உயர் சாதி ஏழைகளுக்கான 10%இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.