ஜம்மு காஷ்மீரில் டிரோனில் இருந்து பணமழை: ஆயுதங்களும் வீச்சு
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து டிரோன் மூலம் வீசப்பட்ட ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 5-6கி.மீ. தொலைவில் உள்ள ராம்கர் மற்றும் விஜய்பூருக்கு இடையே காலை 6.15மணியளவில் பிஸ்டல், வெடிகுண்டுகள் மற்றும் பணம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து டெட்டனேட்டர்கள் சென்று ஆய்வு செய்தபோது, இரண்டு சீன துப்பாக்கிகள், … Read more