இதுதான் காங்கிரஸ் உத்தி: பிரதமர் மோடி பொளேர்!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் … Read more

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்டில் இந்தியில் மருத்துவ படிப்பு: மாநில அமைச்சர் தகவல்

டேராடூன்: மத்திய பிரதேச மாநிலத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கற்பிக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்தி மொழியை ஊக்குவிக்கம் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பட்டப் படிப்பை (எம்பிபிஎஸ்) இந்தியில் படிப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்களும், … Read more

ஆந்திரா, தெலங்கானா, டெல்லி, ராஜஸ்தான் மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி – பாஜக மீது முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில ஆட்சிகளை கவிழ்க்க சதி நடக்கிறது. இதற்கு பாஜகதான் காரணம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா பவனில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: தெலங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்த வீடியோ பதிவுகளை பார்க்கும் போது நம்நாட்டின் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன். இந்த … Read more

பாஜக சீக்ரெட் டீல்: பப்ளிக்கில் போட்டுடைத்த அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகினால், சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோரை, வழக்கு விசாரணையில் இருந்து விடுவிப்பதாக, பாஜக பேரம் பேசியதாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில், தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாஜகவும், காங்கிரசும் கணவன் – மனைவி / சகோதரர் – சகோதரி உறவை கொண்டுள்ளன. தேர்தலில் … Read more

பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரசின் பழைய தந்திரம்..!

பொய் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை அளித்து ஏமாற்றுவது காங்கிரஸ் கட்சியின் பழைய தந்திரம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த முறை அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், அடுத்த 25 ஆண்டுகால இமாசல பிரதேச வளர்ச்சி பயணத்தை முடிவு செய்யும் என  தெரிவித்தார். Source link

நடைபயணத்தில் சினிமா பாடலை பயன்படுத்திய புகார்; ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மீது வழக்கு: கர்நாடகா போலீசார் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற நடைபயணத்தின் போது விதிமுறைகளை மீறி சினிமா பாடலை பாடிய புகாரின் அடிப்படையில் ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை முடித்துக் கொண்டு தற்போது தெலங்கானானில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்ட போது, அனுமதியின்றி ஒரு திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து … Read more

குஜராத் தேர்தல் | “என்னிடம் பாஜக பேரம் பேசியது” – அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்கம்

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக்கொண்டால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி அமைச்சர்கள் மணிஷ் சிசோதியாவும், சத்யேந்தர் ஜெயினும் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பாஜக தன்னிடம் பேரம் பேசியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். என்.டி.டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், “பாஜக முதலில் டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோதியாவை … Read more

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – மாநில அரசு ஷாக் உத்தரவு!

கேரள மாநிலத்தில் பொதுத் துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம், மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் தவிர 122 பொதுத் துறை நிறுவனங்கள், 6 நிதிக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more

தொடர் மழையால் உத்திரமேரூர் பகுதியில் விவசாய பணிகள் ஜரூர்

உத்திரமேரூர்: சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் உத்திரமேரூர் பகுதியில் விவசாய பணிகள் ஜரூராக தொடங்கியுள்ளது. உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிதுள்ளது. குறிப்பாக உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த ெகாள்ளளவில் பாதியளவு நிரம்பியுள்ளது. தொடர்ந்து, பருவமழை தீவிரமடையும் நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதனால் விரைவில் ஏரி நிரம்பும் … Read more

இமாச்சல் தேர்தல் | “பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸின் வாடிக்கை” – பிரதமர் மோடி

மாண்டி (இமாச்சலப் பிரதேசம்): பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலப் பிரதேசத்தின் ஷியாம் சரண் நேகி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்தேன். அவர் தனது 106-வது வயதில் உயிரிழந்திருக்கிறார். முன்னதாக, தபால் வாக்கு … Read more