ஜார்கண்டில் காங். எம்எல்ஏக்கள் வீடுகளில் ஐடி ரெய்டு

ராஞ்சி: ஜார்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியையும், குறிப்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனையும் குறிவைத்து அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளில் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அங்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்களும் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளனர். காங்கிரசை சேர்ந்த குமார் ஜெய்மங்கல், பிரதீப் யாதவ் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை … Read more

கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளிநாட்டு பயணம் பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை: ஜனாதிபதி, பிரதமருக்கு ஆளுநர் கடிதம்

திருவனந்தபுரம்: ‘கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளிநாட்டுக்கு சென்றபோது தன்னிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை,’ என்று ஜனாதிபதி, பிரதமருக்கு கேரள ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பினராயும், ஆளுநரும் நேரடி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பது உட்பட, கேரள அரசு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களில் இதுவரை … Read more

திகார் சிறை டிஜிபி சந்தீப் இடமாற்றம்

புதுடெல்லி:  சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது அம்பலமானதை தொடர்ந்து, திகார் சிறை டிஜிபி சந்தீப் கோயல் அதிரடியாக மாற்றப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த மோசடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கினார். டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் சுகேஷ், கடந்த மாதம் டெல்லி டெல்லி ஆளுநர் சக்சேனாவுக்கு எழுதிய  கடிதத்தில், ‘திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஆம் ஆத்மி … Read more

ஒடிசாவில் விரைவில் சோதனை நடத்தும் இந்திய ஏவுகணையை கண்காணிக்க உளவுக் கப்பலை அனுப்பியது சீனா: இந்திய பெருங்கடலில் நிலைநிறுத்தியதால் பரபரப்பு

புதுடெல்லி: அடுத்த சில நாட்களில் இந்தியா அதிநவீன ஏவுகணையை சோதனை செய்ய உள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் சீனா தனது உளவுக்கப்பலை நிறுத்தியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை கடந்த 2020ம் ஆண்டிலிருந்து தீவிரமான நிலையில் உள்ளது. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம், சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவாங் வாங்-5, இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. தென் சீன கடலுக்கு திரும்பும் முன்பாக எரிபொருள் நிரப்ப இக்கப்பல் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு வருவதாக … Read more

கோயில் எதிரே போராட்டம் நடத்தியபோது பயங்கரம் சிவசேனா மூத்த தலைவர் பஞ்சாபில் சுட்டுக்கொலை: காலிஸ்தான் ஆதரவாளர்கள் செயலா?

அமிர்தசரஸ்: பஞ்சாபில் கோயிலுக்கு எதிரே குப்பையில் சாமி சிலைகள் உடைத்து போடப்பட்டு இருந்ததை கண்டித்து போராட்டம் நடத்திய சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள பிரபலமான கோபால் கோயிலுக்கு எதிரே உள்ள குப்பையில் சமீபத்தில் உடைத்து போடப்பட்ட சாமி சிலைகள் இருந்தன. இதை கண்டித்து, இக்கோயில் எதிரே சிவசேனா நேற்று போராட்டம் நடத்தியது. இம்மாநில சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி தலைமையில் … Read more

அன்று பகவந்த் மான்… இன்று இசுதான் காத்வி…- ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்களும் சர்ச்சையும்

பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அதே அணுகுமுறையை குஜராத்திலும் ஆம் ஆத்மி தொடங்கி இருக்கிறது. ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். … Read more

டிவிட்டரில் ஆட்குறைப்பு துவங்கியது இந்தியாவில் அதிக ஊழியர்கள் நீக்கம்: அலுவலகத்துக்கு வர தடை

புதுடெல்லி: டிவிட்டரில் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. இதில், இந்திய ஊழியர்கள் அதிகளவில் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை, எலான் மஸ்க் ரூ.3.6 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார். அதை வாங்கியதில் இருந்தே டிவிட்டரில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. டிவிட்டரை மஸ்க் வாங்கிய முதல் நாளே, தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டப்பிரிவு தலைவர் விஜயா காட்டே போன்ற … Read more

135 உயிர்களை பலி கொண்ட தொங்கு பால விபத்து: கடவுள் செயலா… ? மோசடி செயலா… ? கணக்கு தீர்க்க காத்திருக்கும் குஜராத் தேர்தல் களம்

கடவுளின் விருப்பத்தால் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நடந்துவிட்டது. குஜராத் மோர்பி பால விபத்தில் கைதான ஓரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக் வழக்கு விசாரணையின் போது நீதிபதி முன்பு தெரிவித்த அலட்சிய பதில் இது. தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் பலியானதை டிவியில் பார்த்து அனைவரும் ச்சச்சோ என்று சொல்லிக்கொண்டு இருந்த நேரம் அது. வடமாநிலங்களில் சாத் பூஜை களைகட்டியிருந்த காலம். விடுமுறை என்பதால் 150 ஆண்டு பழமையான குஜராத் மாநிலத்தின் … Read more

மோர்பி பால விபத்தால் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பா? -கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுடன் ஆம் ஆத்மி கட்சியும் புதுப்பாய்சசலுடன் களமிற்ங்கி உள்ளதால இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. சில வாரங்களுக்கு முன் வெளியான கருத்துக்கணி்ப்புமுடிவுகள், குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தெரிவித்திருந்தன. அதேசமயம் காங்கிரஸ் தற்போதுள்ள இடங்களைவிட குறைவான தொகுதிகளிலேயே வெல்லும் என்றும், ஆம் ஆத்மி … Read more

காரில் சாய்ந்து நின்ற சிறுவன் முதுகில் உதை: உரிமையாளர் கொடூரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கார் மீது தெரியாமல் சாய்ந்து நின்ற 6 வயது சிறுவனை, எட்டி உதைத்த காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே நோ பார்க்கிங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் நின்றது. அதன் மீது 6 வயது சிறுவன் ஏதேச்சையாக சாய்ந்து நின்றான். இதை பார்த்த காரின் உரிமையாளர், அந்த சிறுவனை ஆவேசமாக பாய்ந்து வந்து எட்டி உதைத்தார். இதை … Read more