கர்நாடகாவில் பரபரப்பு: இருசக்கர வாகனத்தில் சென்றவரை விரட்டி தாக்கிய சிறுத்தை புலி..பொதுமக்கள் அலறல்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் சிறுத்தை புலி தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். கே.ஆர். நகர் பகுதிக்குள் மக்கள் சாலையில் நடந்து சென்றபோது அங்கு சிறுத்தை புலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் சத்தம் எழுப்பியதால் வழியில் தென்பட்டவர்களை சிறுத்தைப்புலி தாக்க தொடங்கியது. ஒருசிலர் வீட்டு சுவரில் ஏறி மொட்டை மாடிக்கு சென்று தப்பினர். அதேநேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை சிறுத்தை புலி தாக்கியது. பொதுமக்கள் விரட்டி சென்றபோது அந்த புலி தப்பி … Read more

உலகிலேயே அரிய நிகழ்வு – பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள் -ஜார்க்கண்டில் அதிசயம்

ராஞ்சியில் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் அக்டோபர் 10ஆம் தேதி பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்பெலும்புக்கு கீழே வயிற்றில் கட்டிபோல் இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அதனை அறுவைசிகிச்சை செய்து உடனடியாக அகற்றவேண்டும் என குழந்தையின் பெற்றோரிடம் பரிந்துரைத்துள்ளனர். குழந்தைக்கு 21 நாட்கள் ஆனவுடன் மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திட்டமிட்டபடி நவம்பர் 1ஆம் தேதி அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கட்டியை வெளியே … Read more

அமர்ந்ததும் அக்னிபத் திட்டம் ரத்து: பிரச்சாரத்தில் பிரியங்கா பேச்சு..!

மத்தியில் காங்கிரஸ் அரசு அமையும் போது, அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று, இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைக்கு வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பேரணியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் … Read more

குமரி கல்லூரி மாணவர் கொலையில் கைதான கிரீஷ்மாவின் தாய், மாமா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷரோன் கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக கூறி கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் சிந்து திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையிலும், நிர்மல்குமார் நெய்யாற்றின்கரை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் 2 பேரும் ஜாமீன் கோரி நேற்று நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கொலையில் தங்களுக்கு பங்கு எதுவும் இல்லை. ஆதாரங்களை அழித்ததாக மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டு … Read more

செய்தி ஆசிரியர் முதல் குஜராத்தின் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் வரை – இசுதான் காத்வியின் பின்புலம்

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக இசுதான் சாத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது பின்னணி குறித்து தற்போது பார்ப்போம். 1. குஜராத்தின் கடலோரா சவுராஷ்ட்ராவில் உள்ள துவாரகா மாவட்டத்தின் பிப்லியா என்ற கிராமத்தில் 1982, ஜனவரி 10-ல் பிறந்தவர். இவரது தந்தை கெராஜ்பாய் காத்வி ஒரு விவசாயி. 2. குஜராத் வித்யாபீடத்தில் கடந்த 2005-ம் ஆண்டு இதழியல் பட்டம் முடித்தார். இதையடுத்து, ஊடகங்களில் பணியாற்றத் தொடங்கினார். 3. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யோஜனா என்ற நிகழ்ச்சி தயாரிப்பில் … Read more

கார் மீது சாய்ந்த 6 வயது சிறுவன் – முதுகில் எட்டி உதைத்த நபர் கைது!

கேரள மாநிலத்தில், கார் மீது சாய்ந்ததற்காக 6 வயது சிறுவனை முதுகில் எட்டி உதைத்த நபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் பரபரப்பாக காணப்படும் சாலை ஒன்றின் ஓரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கார் உரிமையாளர், அந்த சிறுவனின் முதுகில் எட்டி உதைத்தார். அதனால், அதிர்ந்து போன அந்த சிறுவன் அமைதியாக ஒதுங்கி நின்றான். அதனை பார்த்த … Read more

ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்.. தாயும் 2 சிசுக்களும் மர்ம மரணம்..!

கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி, தனது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவரின் கணவர் இறந்து விட்டார். கர்ப்பமாக இருந்த இவருக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரிடம் ஆதார் உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லாததால் அவரை அங்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர். அக்கம்பக்கத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், இன்று … Read more

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 68 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 68 மீனவர்களும் விடுவிக்கப்பட்டதால் இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பப்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கே.கே.ரமேஷ் என்பவரின் சார்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் … Read more

#BIG NEWS:- குஜராத் முதல்வர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி..!!

குஜராத் சட்டப்பேரவையின் தேர்தல் நேற்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டார்..டிசம்பர் 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை ஆட்சி செய்துவரும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவைக்கு ஈடாக ஆம் ஆத்மி கட்சியும் கடந்த ஓராண்டாக … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!

டெல்லியில், காற்று மாசு காரணமாக, அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என, அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்றின் தரம் மாசடைவதாகக் கூறப்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் … Read more