அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு..!

காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் நாளை முதல் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 5-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என, டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதிக அளவில் மோசமடைந்து இருப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என டெல்லி அரசுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டது. … Read more

பெங்களூரு மெட்ரோ: வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான பேயூ (PayU) பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பெங்களூரு மெட்ரோவைப் பயன்படுத்துபவர்கள் டிக்கெட் எடுப்பதற்கு, பயண அட்டையை ரீசார்ஜ் செய்வதற்கு இனி கவுண்டருக்குச் செல்லத் தேவையில்லை. வாட்ஸ் மூலம் இவற்றைச் செய்துகொள்ளலாம். 8105556677 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக ‘Hi’ என்றுஅனுப்பியோ அல்லது மெட்ரோ நிலையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூ கோர்டை … Read more

எலான் மஸ்க் என்ன பண்ணீங்க? எங்களுக்கு ட்விட்டர் வர மாட்டீகுது… கதறும் இந்தியர்கள்!

உலகம் முழுவதும் பிரபல சமூக வலைதளமாக ட்விட்டர் விளங்குகிறது. இதனை சமீபத்தில் அமெரிக்காவின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். அதன்பிறகு சிஇஓ பராக் அக்ரவால் முதல் பல்வேறு முக்கிய நிர்வாகிகளை வேலையை விட்டு தூக்கினார். அடுத்தகட்டமாக ஊழியர்களை அதிரடியாக நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் ப்ளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர் கட்டணம் என்றும் அதிரடி காட்டினார். இந்த சூழலில் இந்தியாவில் உள்ள பயனாளர்கள் பலருக்கு ட்விட்டர் வலைதளம் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. … Read more

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்: டெல்லி அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் காற்று மாசுவை குறைக்க 50 சதவீதம் அரசு ஊழியர்கள் காற்று மாசு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் 50 சதவீதம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

காற்று மாசு தீவிரம் | டெல்லியில் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை – அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் அங்கு (நாளை) சனிக்கிழமை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் 5ம் வகுப்புக்கு மேல் படித்தும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கூறினார். தேசிய தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களாக காற்றின் தரக்குறியீடு 400 வரை எட்டி மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. காற்று … Read more

திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும்-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் கிராமங்கள் பசுமை மண்டலமாக மாற்றப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அரசு தலைமை செயலர் சமீர் சர்மா அனைத்து மாவட்ட கலெக்டர், இணை கலெக்டர்களுடன் கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், திருப்பதி கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் வெங்கடரமணா, இணை ஆட்சியர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தலைமை செயலாளர் சமீர் சர்மா மாநிலத்தில் நிலுவையில் … Read more

செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை உறுதி

புதுடெல்லி: செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர் தீவிரவாதிக்கு விதித்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் தீவிரவாதிகள் சிலர் புகுந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்கிற அஷஃபக் அடுத்த சில … Read more

கோவிட் அடுத்த அலை ரெடி! பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கோங்க! எச்சரிக்கும் WHO

புதுடெல்லி: கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் என்றும், அடுத்த கோவிட் அலை இந்தியாவில் வரலாம் என்றும் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியர்கள் பூஸ்டர் டோஸ்களை கைவிடுவதால், ‘XBB வகை கொரோனா வைரஸ்’ மீண்டும் கோவிட்-19 அலையை ஏற்படுத்தலாம் என்றும் WHO எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.”ஒமிக்ரான் வகை வைரசின் 300-க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. தற்சமயம் XBB வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்று நான் நினைக்கிறேன், இது ஒரு மறுசீரமைப்பு வைரஸ் ஆகும். … Read more

ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாறவேண்டும் என்பது இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாறவேண்டும் என்பது இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அக்கட்சியினர் மனு அளிக்கின்றனர். ஆட்சிக்கும், வழக்கு விசாரணைக்கும் சம்மந்தம் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி அமர்வு கூறியுள்ளார். 

திரிபுரா: மூங்கில் ஏற்றிவந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தல்.!

திரிபுராவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திரிபுரா அகர்தலாவில் உள்ள ஹவாய் பாரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, ஓட்டி வந்தவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதில் முழு சோதனையையும் மேற்கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரனையில் ஈடுபட்டனர். பின்னர் கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு … Read more