தெலங்கானா உட்பட 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

புதுடெல்லி: தெலங்கானா, பிஹார், உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. தெலங்கானாவின் முனுகோடு, பிஹாரின் மொகாமா, கோபால்கன்ச், மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, ஹரியாணாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜகவிடமும், 2 தொகுதிகள் காங்கிரஸிடமும், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிடம் தலா ஒரு … Read more

டெல்லி செங்கோட்டை தாக்குதல் பாக். தீவிரவாதியின் தூக்கு மீண்டும் உறுதி: மறுசீராய்வு மனு தள்ளுபடி

புதுடெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி முகமது ஆரிப். இவன் கடந்த 2000ம் ஆண்டு, டிசம்பர் 22ம் தேதி டெல்லி செங்கோட்டை மீது தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டான். அன்றைய தினம் செங்கோட்டைக்குள் புகுந்த தீவிரவாதிகள், ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆரிப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை 2007ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து உச்ச … Read more

குஜராத் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்..!!

இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை நேற்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் … Read more

கல்வி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு..!! இனி 10 நிமிட 'தியானம்' கட்டாயம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முந்தைய கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்புகளைத் தொடங்குவதற்கு முன் பத்து நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவிட்டுள்ளார். மன மற்றும் உடல் அழுத்தத்தை குறைத்து, செறிவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த மாணவர்கள் தினமும் தியானம் செய்ய வேண்டும் என அமைச்சர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில பள்ளிகளில் தியானம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் தியானம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் … Read more

கரோனா காலத்தில் சமச்சீர் கல்வி கோரிய மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நாட்டில் கடந்த 2020-ல் கரோனா வைரஸ் பாதிப்பின்போது பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. அப்போது புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க சமச்சீரான கல்விக் கொள்கை வகுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளின் கல்விக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதுமானதல்ல என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க … Read more

பாலம் விபத்து விசாரணை மந்தம் இதுவும் கடவுள் செயலா? மோடிக்கு கார்கே கேள்வி

புதுடெல்லி: ‘மோர்பி பாலம் விபத்தும் கடவுளின் செயலா?’ என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம், மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து 135 பேர் பலியான விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு வருமாறு: மோர்பி பாலத்தில் துருபிடித்த கேபிள்கள் சரி செய்யப்படவில்லை. பயன்பாட்டுக்கு ஏற்றது என்ற சான்றிதழ் பெறாமல், அக்டோபர் 26ம் தேதி பாலம் திறக்கப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்ததாரர் இந்த பணிக்கு … Read more

சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் | சதாப்தியைவிட 30 நிமிடம் முன்பாக செல்லும் – தென்மேற்கு ரயில்வே அட்டவணையில் தகவல்

சென்னை: சென்னையிலிருந்து மைசூருக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் காலஅட்டவணை தென்மேற்கு ரயில்வே சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில், சதாப்தி ரயிலைவிட 30 நிமிடம் முன்னதாக மைசூரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வரிசையில் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை-மைசூர் இடையே நவ.11-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில், … Read more

8ம் தேதி சந்திர கிரகணம் திருப்பதி ஏழுமலையானை அரை நாள் பார்க்க முடியாது: அனைத்து தரிசனமும் ரத்து

திருமலை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் அரைநாள் மூடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8ம் தேதி  சந்திர கிரகணத்தை முன்னிட்டு, 12 மணி நேரம்  நடை மூடப்பட உள்ளது. சந்திர கிரகணம் பிற்பகல் 2.39 முதல் 6.19 வரை இருக்கும் என்பதால் கோயில் காலை 8.40 மணிக்கு நடை மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். இதனால்  விஐபி தரிசனம், … Read more

லாரியில் சென்ற விமான பாகம் பஸ்சில் மோதியது: டிரைவர், 5 பயணிகள் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழைய விமானங்களை உடைத்து அதன் பாகங்களை ஏலத்தில் விடுவது வழக்கம். பழைய விமானங்களை உடைப்பதற்கு முன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் அதை படிப்பதற்காக பயன்படுத்துவார்கள். இப்படி, பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட ஏர் இந்தியாவின் ஏ320 ஏர் பஸ் உடைக்கப்பட்டது. இதன் பாகங்களை ஐதராபாத்தை சேர்ந்த ஜோகீந்தர் சிங் என்பவர் ரூ.75 லட்சத்திற்கு  ஏலத்தில் எடுத்தார். நேற்று முன்தினம் விமானத்தின் சிறகுகள், இன்ஜின், டயர்கள் உள்ளிட்ட பாகங்களை 4 ராட்சத … Read more

குஜராத் மாநிலத்தில் டிச. 1, 5-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் – டிச. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குஜராத்தில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 4.91 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. முதல்முறையாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சிறப்பு பார்வையாளர் நியமிக்கப்பட்டு, முதியோர், … Read more