நளினி விடுதலை வழக்கு நவ.11க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை தொடர்பான வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைடுத்து, ‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம்’ என … Read more

குஜராத் சட்டசபைக்கு டிச.1, 5ல் தேர்தல்: இரண்டு கட்டமாக நடக்கிறது.! நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

புதுடெல்லி: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் விரைவில் முடிய உள்ளதால், இங்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. தேர்தல் நடத்தபட்ட உள்ள … Read more

மாட்டிறைச்சி விற்றதாக இருவர் அரைநிர்வாணப்படுத்தி கொடுமை – சட்டீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

மாட்டிறைச்சி விற்றதாக சந்தேகத்தின்பேரில் இருவரின் ஆடைகளை கழற்றி, சாட்டையடி கொடுத்து அரை நிர்வாணமாக ஊர்வலம் கூட்டிவந்த கொடுமை சட்டீஸ்கரில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சக்கர்பதா காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நர்சிங் தாஸ்(50) மற்றும் ராம்நிவாஸ் மெஹர்(52) என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை மூட்டையை கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த கூட்டத்தினர், அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என விசாரித்துள்ளனர். … Read more

கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். அக்பர் அலி (52) என்பவர் நண்பர்களுடன் மூணாறு பகுதிக்கு காரில் சென்ற நிலையில் மறையூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார் பிரதமர் மோடி..!

பிரதமரின் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தெற்கு டெல்லியில்3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வளாகத்தில் வீடுகளின் சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார். 40 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்த சிலர் இதனால் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகி பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். இத்திட்டம் ஏழை பணக்காரர் இடையிலான இடைவெளியை குறைக்கும் என்று பிரதமர் மோடி தமது பேச்சில் குறிப்பிட்டார். டெல்லியின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி பேசிய மோடி, துரதிர்ஷ்டவசமாக இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர் … Read more

காற்றுமாசை தடுக்க தவறியதே பிரதமர் மோடி தான்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றசாட்டு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் நீடித்துவரும் நிலையில் வடமாநிலங்களில் காற்று மாசை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தீபாவளியன்று காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டிய நிலையில், அது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் வாகன பயன்பாட்டை குறைத்துக்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள டெல்லி அரசு, வீடுகளிலிருந்தே பணிபுரியுமாறும் … Read more

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்?- ஆணையம் அசத்தல் விளக்கம்!

குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி கடந்த முறை (2017) ஓரே நேரத்தில் அறிவிக்கப்பட்டன. அதேபோன்று இம்முறையும் இரு மாநிலங்களின் பேரவைக்கான தேர்தல் தேதி ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக ஹிமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16 ஆம் தேதி அறிவித்தது. குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் … Read more

2.3 அடி உயரம் உடைய இளைஞர் பல ஆண்டு தேடலுக்குப் பிறகு தனக்கு திருமணம்..!

சுமார் இரண்டு புள்ளி 3 அடி உயரம் கொண்ட அசீம் மன்சூர் என்ற 30 வயது இளைஞர் பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு தனக்கு ஏற்ற உருவ அமைப்பில் உள்ள மணமகளைக் கண்டுபிடித்து நேற்று திருமணம் செய்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்ளி மாவட்டத்தில் உள்ள ஹாப்புரில் அவர் திருமணம் நடைபெற்றது. பிரதமர் மோடி முதலமைச்சர் யோகி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அவர் திருமணப் பத்திரிகையை அனுப்பி வைத்து அழைப்பு விடுத்திருந்தார்.  Source … Read more

அபாயமான அளவில் காற்று மாசு பள்ளிகள் மூடப்படும் என டெல்லி அரசுக்கு எச்சரிக்கை: குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: ‘தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. காற்றில் விஷத்தன்மை அதிகரித்துள்ளதால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதே நிலை நீடித்தால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்’ என்று மாநில அரசுக்கு குழந்தைகள் உரிமை தேசிய பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசு கவலை தருவதாக இருக்கிறது. நேற்று டெல்லியில் காற்று மாசு அளவீடு செய்யப்பட்டதில், ‘மிகவும் மோசம்’ என பரிசோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும், ‘காற்றில் … Read more

டெங்கு பாதிப்பால் 36 பேர் உயிரிழப்பு!?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளானதால் பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நகரின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் டெங்குவை கட்டுப்படுத்தாமல் உத்தரப்பிரதேச அரசு, குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக … Read more