டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சர், குடிநீர் வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை சவுரப் பரத்வாஜ் வகித்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுக்கான தலைவராக உள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியில் மருத்துவ கட்டுமான திட்டங்களில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக அளித்த புகாரின் பேரில் டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை (ஏசிபி) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து ஏசிபி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த … Read more

திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் அறங்​காவலர் குழு தலை​வ​ராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்​யப்​பட்​ட​தில் இருந்து, வேற்று மத ஊழியர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இந்​துக்​கள் என கூறி, போலி சான்​றிதழ் கொடுத்து வேற்று மதத்தை தழு​வி, அந்த மதத்தை பின்​பற்றி வரும் தேவஸ்​தான ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்டு வருகின்றனர். முதலில் 22 வேற்று மத ஊழியர்​கள் இடைக்​கால பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். இதனை தொடர்ந்து மேலும் 6 ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது … Read more

பருவமழையால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு

புதுடெல்லி: வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில், வைஷ்ணவி தேவி கோயில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மட்டும் 34 ஆகும். டெல்லியில் இயல்பை விட 60% அதிக மழை: டெல்லியில் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை பெய்த மழையின் அளவு … Read more

“என் உயிர் உள்ளவரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்” – மம்தா சூளுரை

கொல்கத்தா: “நான் உயிரோடு இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். மேலும், நாடு முழுவதும் மேற்கு வங்க மக்கள் மீது பாஜக ‘மொழியியல் பயங்கரவாதத்தை’ கட்டவிழ்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய கொல்கத்தாவின் மாயோ சாலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணமூல் சத்ரா பரிஷத்தின் நிறுவன தின நிகழ்வில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் மம்தா … Read more

ஆளுநரும், முதல்வரும் ஒரே உறையில் இரண்டு வாள்களாக இருக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கில், ‘ஆளுநரும் முதல்வரும் ஒரே உறையில் இரண்டு வாள்களாக இருக்க முடியாது’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது தொடர்பான விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் விசாரணை … Read more

சத்தீஸ்கரில் ரூ.81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 30 மாவோயிஸ்டுகள் சரண்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அவர்களில் இருபது பேருக்கு 81 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ் தெரிவித்தார். மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கரில் சமீபத்திய மாதங்களில், அதிகளவில் மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 9 பெண்கள் உட்பட 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அவர்களில் 20 பேருக்கு 81 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் கண்காணிப்பாளர் … Read more

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும், இரண்டு பேரை காணவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பால்கர் மாவட்டத்தின் விரார் கிழக்கில் உள்ள நான்கு மாடி கட்டிடமான ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்து சிகிச்சை … Read more

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், 25% கூடுதல் வரி திரும்பப் பெறுவோம் -அமெரிக்கா

Trump Tariffs News: அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக வரி யுத்தத்தை தொடங்கியுள்ள டிரம்ப், இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தால், இந்திய பொருளாதரத்திற்கு மரண அடி விழுந்துள்ளது. 66% இந்திய ஏற்றுமதிக்கு பாதிப்பு. லட்சக்கணக்கானோர் வேலைக்கு இழக்கும் ஆபத்து. மோடி அரசின் திட்டம்.

தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர்

சென்னை: தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், பிஹாரிக்கள் மீதான அக்கறையில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பிரசாந்த் கிஷோர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஹார் வந்துள்ளார். இதே பிஹாரின் மைந்தர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்ட போது அவர் எங்கே … Read more

இந்த 26 லட்சம் பெண்களுக்கு மாத ஊக்கத்தொகை வராது… மாநில அரசு அதிரடி முடிவு!

Ladki Bahin Yojana: பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுக்கும் இந்த மாநில அரசின் திட்டத்தில் இருந்து 26 லட்ச பயனர்களின் பெயர் நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.