6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்..!

6 மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தெலுங்கானாவில் முனுகோடே , பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின் தமன்நகர் ஆகிய தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மும்பை அந்தேரி கிழக்குத் தொகுதியில் சிவசேனாவின் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஷிண்டே ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தனது … Read more

'குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது கடவுளின் செயல்': பராமரிப்பு நிறுவனம் கூறிய கருத்தால் சர்ச்சை..!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது கடவுளின் செயல் என பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனம் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் உயிரிழந்தது தொடர்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்களின் ஒருவரான தீபக் பரேக் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரேவா நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டோம் என மோர்பி, ஜார்கண்ட் வழக்கறிஞர்கள் சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இது தொடர்பான வழக்கு … Read more

மிகவும் கஷ்டப்பட்டுவிட்டேன்; மன்னித்து விடுங்கள் – கோயிலில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்த திருடன்

போபால்: மத்திய பிரதேசத்தில் பாலகாட் நகரில் உள்ள லம்டா என்ற இடத்தில் ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் 24-ம் தேதி விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போயின. போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு குழியில் ஒரு பை இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். அப்பையில் கோயிலில் திருடுபோன அனைத்து பொருட்களும் இருப்பதைக் கண்டு … Read more

இந்தியாவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 25% அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் ஏப்ரல் – செப்டம்பர் வரை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி $1,3771 மில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி மதிப்பு 25 சதவீதம் அதிகரிப்பு என வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் யாருக்கு?- சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று நண்பகல் வெளியாகிறது

புதுடெல்லி: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (நவ 3) நண்பகல் 12 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குஜராத் தேர்தல் தேதியும் சேர்த்தே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வெளியாகும் என்று தலைமைத் தேர்தல் ஆணைய … Read more

6 மாநிலங்கள், 7 தொகுதிகள்… கொடி நாட்டுமா பாஜக? காங்கிரஸ் என்னவாகும்?- பரபரக்கும் இடைத்தேர்தல்!

பிகார் (மொகாமா, கோபால் கஞ்ச்), மகாராஷ்டிரா (அந்தேரி கிழக்கு), ஹரியானா (ஆதம்பூர்), தெலங்கானா (முனுகோட்), உத்தரப் பிரதேசம் (கோலா கோக்ரானத்), ஒடிசா (தம்நகர்- SC) ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 3) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆளுங்கட்சியாக இருக்கிறது. விரைவில் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது. இவற்றில் பாஜக, காங்கிரஸ், பிராந்திய கட்சிகள் இடையே பலத்த … Read more

தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரும் முடிவும் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணமும்….

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்து, ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திர்நுதது. இந்த நிலையில், ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவெடுத்திருக்கும் நிலையில் அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி செல்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி … Read more

தெலங்கானாவில் இன்று இடைத்தேர்தல் ₹4 ஆயிரம் பணம் பத்தாது 10 கிராம் தங்கமும் வேணும்

* பாஜவுக்கு ஓட்டு போட கிராம மக்கள் கறார் திருமலை : தெலங்கானாவில் இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் 10 கிராம் தங்கம் கொடுத்தால் மட்டுமே பாஜவுக்கு ஓட்டு என்று வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவைக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு 10 கிராம்  தங்கம் தருவதாக பாஜவினர் கூறியுள்ளனர்.  ஆனால், ₹4 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளார்களாம். இதனால், பாஜ தலைவர்களுக்கு வாக்காளர்கள் கண்டனம் … Read more

`பள்ளி மாணவிகளுக்கு இலவசமா நாப்கின்கள் வழங்கணும்’- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

நாடெங்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் தேவையானோருக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயா தாக்கூர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் சானிடரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாத நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற காரணங்களால் பல மாணவிகள் பள்ளி … Read more

இவர்கள் மனிதர்களா இல்லை மனித மிருகங்களா ? 56 துண்டுகளாக வெட்டப்பட்டப்பட்டு நரபலி- டிஎன்ஏ பரிசோதனையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் கொலை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்ட குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. இந்த உடல் பாகங்கள் அனைத்தும் பத்மா உடையது தானா என்பதை அறிய காவல் துறையினர் மருத்துவர்கள் உதவியோடு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 56 துண்டுகளில் ஒரு பாகம் பத்மாவின் உடல் என்று டிஎன்ஏ முடிவுகள் வெளியாக்கியுள்ளது. பகல்சிங் என்பவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு நரபலி கொடுத்த தமிழகத்தின் தர்மபுரி பகுதியைச் … Read more