குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி… தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்கிறது!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 18, 2023 உடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி ஆகாஷ் பவனில் உள்ள ரங் பவான் ஆடிட்டோரியத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அவர்கள், குஜராத் மாநில சட்டமன்றத்திற்கு எப்போது தேர்தல் நடத்தப்படும், வேட்புமனு தாக்கல், வாக்கு … Read more

Bad Debts: வங்கிகளின் வாராக்கடன் 60000 கோடி ரூபாயா? செபியின் அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: இந்திய மூலதனச் சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. செபி வெளியிட்டுள்ள தகவலின்படி, 60 ஆயிரம் கோடி ரூபாய், வாராக்கடன் தொகை அதிகபட்ச அளவு அதிகரித்துள்ளது. இந்திய மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டாளர் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) மார்ச் 2022 இறுதியில் ‘திரும்ப வசூலிக்க முடியாத கடன்’ பிரிவில் ரூ.67,228 கோடி நிலுவைத் தொகை இருப்பு இருக்கிறது.  பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 96,609 கோடி ரூபாய் கடன் தொகை … Read more

சிஆர்பிஎப் ஐஜி.யாக 2 பெண்கள் நியமனம்

புதுடெல்லி : ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரிகள், பைலட்டுகள் உள்பட பல பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், சிஆர்பிஎப்.பில் ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா என்ற 2 பெண் அதிகாரிகள் ஐஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப்.பில் ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் 3 பேர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் முதல்முறையாக  ஆனி ஆபிரகாம், சீமா துண்டியா ஆகியோர்  ஐஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கலவர தடுப்பு படைக்கு (ஆர்ஏஎப்) ஆனியும், பீகார் பிரிவுக்கு … Read more

திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி… ஆறு கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

ஆந்திராவில் டிராக்டர் மீது உயர் மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 6 கூலித் தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் டிராக்டரில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக சாலையின் குறுக்கே சென்ற உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து, அவர்கள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது விழுந்துள்ளது. இதில், டிராக்டரில் பயணித்த 6 பேர் மீது மின்சாரம் … Read more

அசோக் கெலாட்டை பிரதமர் பாராட்டியது சாதாரணமானதல்ல – காங்கிரஸ் மேலிடத்துக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொல்லப்பட்ட பழங்குடி சமூகத்தினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ‘மன்காட் தாம்’ என்ற நினைவிடத்தை நேற்று முன்தினம் தேசிய சின்னமாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக பன்ஸ்வாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வருமான அசோக் கெலாட்டும் பங்கேற்றார். விழாவில் மோடி பேசும் போது, “அசோக் கெலாட்டும், நானும் ஒரே காலத்தில் முதல்வர்களாக பணியாற்றி இருக்கிறோம். இந்தியாவில் உள்ள முதல்வர்களிலேயே மிகவும் மூத்த முதல்வர் என்ற பெருமை … Read more

காற்றின் தரம் உயரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க குழந்தை உரிமை ஆணையத் தலைவர் வலியுறுத்தல்..!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் உயரும் வரை மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டுமென தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காற்று மாசு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, காற்று மாசு சீரான நிலையை அடையும் வரை பள்ளிகளுக்கு … Read more

அருணாச்சல புதிய ஏர்போர்ட் பெயர் ‘டோன்யி போலா’

புதுடெல்லி: அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்துக்கு, ‘டோன்யி போலா’ என பெயர் சூட்டுவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் இடாநகரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.649 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த விமான நிலையத்துக்கு டோன்யி போலோ என பெயர் சூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, அருணாசலப் பிரதேச அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இது … Read more

சுட்டுக் கொல்லப்பட்ட துபேவின் ரூ.10.12 கோடி சொத்து முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதா விகாஸ் துபே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதில் கிடைத்த பணத்தில் அசையா சொத்துகளை வாங்கி உள்ளார். கான்பூர், லக்னோவில் விகாஸ் துபே, அவரது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுக்கு சொந்தமான ரூ.10.12 கோடி அசையா சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கான்பூர் நகர் மாவட்டம், பிக்ரூ கிராமத்தைச் … Read more

பெற்ற மகனை கூலிப்படை ஏவி கொலை செய்த பெற்றோர்..!

தெலுங்கானாவில் பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவத்தில், பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூர்யபேட்டை முசி ஆறு அருகே  அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்தனர். சம்பவத்தன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்த போது, கல்லூரி முதல்வர் ராம் சிங்-அவரது மனைவி ராணிபாய் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக் … Read more

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு பலாத்காரம் நடந்தது தெரிந்தும் புகார் தராமல் மறைப்பது குற்றம்: டாக்டர் மீது நடவடிக்கை

புதுடெல்லி: ‘மைனர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி தெரிந்த பிறகும், அது பற்றி புகார் தராமல் இருப்பது கடுமையான குற்றமாக கருதப்படும்’ என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டம், ரஜூரா பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் பழங்குடியின சிறுமிகள் சிலர் அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தனர். விடுதியில் சில பழங்குடியின மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியானது. இது தொடர்பாக குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த … Read more