பிஹார் தேர்தல் வெற்றி எதிரொலி: நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1800 ஆக உயர்த்த திட்டம்

பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி வெளியான பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிஹாரில் மீண்டும் தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கைய உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் … Read more

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணியின் வாக்குகளை பிரித்தது யார்?

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் எவரும் எதிர்​பார்க்​காத வகை​யில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்​டணி 35 மட்​டுமே பெற்​றுள்​ளது. இக்​கூட்​ட​ணி​யின் வாக்​கு​களைப் பிரித்​தது யார் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் மற்​றும் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்​பி) ஆகிய மூன்று கட்​சிகளும் இணைந்து மெகா கூட்​ட​ணியின் பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பிரித்​துள்​ளது. பிர​சாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 238 தொகுதியில் போட்​டி​யிட்​டது. ஒரு தொகு​தி​யில் கூட வெல்ல … Read more

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​நிலை​யில், இப்​போதைய அமைச்​சர​வை​யின் கடைசி கூட்​டம் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமோக வெற்றி பெற்​றதற்​காக நிதிஷ் குமாருக்கு அமைச்​சர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். பின்​னர் இப்​போதைய சட்​டப்​பேர​வையை கலைப்​பது என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, முதல்​வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்​தித்​தார். அப்​போது சட்​டப்​பேர​வையை … Read more

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு – நடந்தது என்ன?

ஹைதராபாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், புனித ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் … Read more

இண்டியா கூட்டணியை அகிலேஷ் வழிநடத்த வேண்டும்: சமாஜ்வாதி எம்எல்ஏ விருப்பம்

புதுடெல்லி: இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்​டும் என்று அக்​கட்சி எம்​எல்ஏ ரவி​தாஸ் விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து சமாஜ்​வாதி கட்​சி​யின் மத்​திய லக்னோ தொகுதி எம்​எல்ஏ ரவி​தாஸ் மல்​ஹோத்ரா கூறும்போது, ‘‘பிஹாரில் வாக்​குச் சீட்டு அடிப்​படை​யில் தேர்​தல் நடந்​திருந்​தால் இண்​டியா கூட்​டணி வெற்றி பெற்​றிருக்​கும். நாட்​டின் அரசி​யல் முக்​கிய​த்​து​வம் வாய்ந்த ஒரு மாநிலத்​தில் (உ.பி.​யில்) தனித்து ஆட்சி அமைக்​கும் திறனுள்ள கட்​சி​யாக சமாஜ்​வாதி உள்​ளது. இண்​டியா கூட்​ட​ணியை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் … Read more

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர். … Read more

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு ஏன்? – வருவாய்த் துறை சங்கங்கள் விவரிப்பு

சென்னை: தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அளவுக்கு அதிகமான பணி நெருக்கடி காரணமாக இதுதொடர்பான அனைத்து பணிகளையும் நாளை (நவ.18) முதல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய … Read more

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் வாக்காளர் … Read more

சென்னை ஆவணக் காப்பகத்தில் தமிழக வரலாறு ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 உதவித்தொகை: அமைச்சர் கோவி.செழியன்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தின் அரிய ஆவணங்கள் உதவியுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்வு செய்ய மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு முதுகலை பட்டதாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலா்ம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இயங்கி வரும் பழமைமிகுந்த தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் … Read more

வீட்டு வேலை செய்ய ரூ.1 லட்சம் சம்பளம்! ஓனருக்கு பெரிய மனசு..அப்ளை பண்றீங்களா?

1 Lakh Salary For House Manager : பிரபல ஏஐ நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர், தங்கள் வீட்டை பார்த்துக்கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் என்று வெளியிட்டிருக்கும் போஸ்ட், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.