இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்… மீறினால் ரூ.1000 அபராதம்- 3 மாதங்கள் லைசென்சு ரத்து

புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுவை போக்குவரத்து காவல் ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், புதுவையில் சமீப காலமாக சிறுவர்கள் அதிகளவில் அனுமதியின்றி இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது அதிகரித்துள்ளது என்றும் அதனால் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட்  அணிவது கட்டாயம் என்றும் மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் … Read more

நிலவில் அதிகளவு சோடியம் சந்திரயான் 2 கண்டுபிடிப்பு

புதுடெல்லி: நிலவில் அதிகளவில் சோடியம்  இருப்பதை  சந்திரயான் 2 விண்கலம் கண்டுபிடித்து, படம் எடுத்து அனுப்பி உள்ளது. இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சந்திரயான்-1 விண்கலம் நிலவில் சோடியம் இருப்பதை கண்டறிந்தது. இது, தற்போது புது கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்து கொடுத்துள்ளது. இந்தியாவின் சந்திரயான் -2 விண்கலம், முதல் முறையாக நிலவில் உள்ள சோடியத்தின் அளவை கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் வரைபடமாக்கி உள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர். … Read more

கொடுமையில் இது பெரும் கொடுமை..!! காது சிகிச்சைக்கு போய் கையை இழந்த இளம்பெண்!

பாட்னாவை சேர்ந்தவர் ரேகா. இவருக்கு திடீரென காது வலி ஏற்பட்டதால் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் ரேகாவின் காதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜூலை 11ம் தேதி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த செவிலியர் ஒருவர் ரேகாவுக்கு ஊசி போட்டுள்ளார். ஆனால், ஊசி போட்ட சிறிது நேரத்தில் கையில் வலி ஏற்பட்டு, கை முழுவதுமாக நீல நிறமாக மாறியது. இதைக் கண்டு … Read more

இனி ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியாது… செக் வைக்கும் தேர்தல் ஆணையம்..!!

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நிதி செலவை மேற்கோள் காட்டி இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார். இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த கூடுதல் நிதிச் செலவு மற்றும் பணிச்சுமை தொடர்பாக சட்ட அமைச்சகத்திடமும் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. பரிந்துரையை அமல்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 33வது … Read more

‘அம்னெஸ்டி’ இந்தியாவின் ரூ.1.5 கோடி முடக்கம்

புதுடெல்லி: அம்னெஸ்டி இந்தியா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.1.54 கோடியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. பிரிட்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அம் னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. இதன் இந்திய பிரிவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா நிறுவனம் (ஏஐஐபிஎல்), வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறி நிதி பெறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு பதிவு செய்து விசாரணை … Read more

பிரதமர் மோடி இன்று முதல் 3 நாள் குஜராத் பயணம்

பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் பயணமாக குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இன்று செல்கிறார். இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றல் கிராமம் உள்ளிட்ட 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மூன்றுநாள் பயணமாக இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி அங்கு 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் மாநிலம் மோதெராவில் இன்றுமாலை … Read more

புலியுடன் மோதிய நாய்

புலியுடன் கோல்டன் ரிட்ரீவர் நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதில் சிங்கம் ஒன்று அமர்ந்து இருக்கிறது. அதன் முன்னே அதனை பார்த்தபடி வரிப்புலி ஒன்று அமர்ந்திருக்கிறது. அதன் அருகே நாய் செல்கிறது. திடீரென புலியின் காது ஒன்றை நாய் வாயில் கவ்வி கொள்கிறது. அதனை விடாமல் நாய் பிடித்து இழுக்கிறது. அதுவரை பொறுமையாக இருந்த புலி சற்று நேரத்தில் வலி பொறுக்காமல் நாயை தனது முன்னங்கால்களை கொண்டு … Read more

வங்கதேசத்தில் காளி கோயிலில் சிலைகள் சேதம்

தாகா: வங்கதேசத்தில் இந்து கோயிலில் இருந்து சாமி சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளி்ல் சமீப காலமாக இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாகி இருக்கின்றன.பாகிஸ்தானில் இந்து இளம்பெண்கள் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தில் ஜெனதா பகுதியில் உள்ள தவுதியா என்ற கிராமத்தில் காளி கோயில் உள்ளது. இதில் இருந்த சிலைகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு வீசப்பட்டு உள்ளது. நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு சிலைகளுக்கு இறுதி … Read more

இந்து கோவிலில் சாமி சிலை சேதம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

வங்கதேசத்தன் ஜெனைதா பகுதி தவுதியா கிராமத்தில் காளி கோவில் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கோவிலில் இருந்த சாமி சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவு கோவிலின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து, சிலைகள் ஆற்றில் கரைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. … Read more

இந்து கோவிலில் சாமி சிலை சேதம்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!!

வங்கதேசத்தன் ஜெனைதா பகுதி தவுதியா கிராமத்தில் காளி கோவில் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கோவிலில் இருந்த சாமி சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவு கோவிலின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து, சிலைகள் ஆற்றில் கரைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. … Read more