"எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகள் குறித்த பயத்தில் இருக்கிறார்கள்"  – கபில் சிபில் 

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, மாநில காவல்துறை ஆகியவைகள் குறித்த அச்சத்துடனேயே இருக்கின்றனர் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை பேசிய கபில் சிபல் கூறியதாவது: மதத்தை ஒரு ஆயதமாக பயன்படுத்துவது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. மதங்களை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இந்தியா ஒரு மிகையான உதாரணமாகும். தற்போது உண்மையான பிரச்சினை என்னவென்றால் இந்தியாவில் வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் … Read more

முதல்வர் நாற்காலியில் ஏக்நாத் ஷிண்டே மகன் – வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்!

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா கட்சி அதிருப்தித் தலைவரான முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். பால் தாக்கரேவின் சிவசேனா கட்சிக்கு, ஏக்நாத் ஷிண்டேவும், உத்தவ் தாக்கரேவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த விவகாரத்தில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது … Read more

ஆபாச படம் வழக்கு: நாடு முழுவதும் 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

டெல்லி: குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்த தொடர்பான வழக்குகள் தொடர்பாக 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ இரு வழக்குகளை பதிவு செய்து ஆபரேஷன் மேகசக்ரா என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்டர்போல் சிங்கப்பூர் பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை … Read more

பெண் ஊழியர் கொலை: உத்தரகாண்ட் பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு

ஹரித்வார்: தனது ஓய்வு விடுதியில் வரவேற்பாளராக வேலைபார்த்து வந்த 19 வயது இளம் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக, உத்தரகாண்ட் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதல்வரின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதி இடிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா பவுரி மாவட்டத்தில் ரிஷிகேஷ் அருகே வனாந்த்ரா … Read more

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடுவது உறுதி

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடுவது உறுதியானது. சசிதரூர் சார்பில் அவருடைய பிரதிநிதிகள் வேட்புமனு படிவங்களை கட்சியின் தேர்தல் ஆணைய ஆணைய தலைவரிடம் வழங்கி சென்றனர்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சியின், மாநில , மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிகளவில் பெண்கள், இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றனர் என்பது புரிந்தது. அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி … Read more

பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர்

கேரளா:பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இண்டியா மீதான என்ஐஏ, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆக்டோபஸ் என பெயர் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செப் 22-ல் மேற்பட்ட மாநிலங்களில் சோதனை நடத்தி 106 பிஎப்ஐ நிர்வாகிகளை என்ஐஏ அமலாக்கத்துறை கைது செய்திருந்தது

கட்சித் தலைவர் என்பவர்… – காங்கிரஸ் தேர்தலுக்கு முன்பாக ஜி23 தலைவர்கள் விதித்த நிபந்தனை

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் பகுதி நேரத் தலைவராக இருக்கக் கூடாது. அவர் எந்த நேரமும் மக்களைச் சந்திக்க கூடிய ஒருவராக இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஜி23 தலைவர்களில் ஒருவரான பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் பற்றியும், புதிய தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் காங்கிரஸ் கட்சியின் ஜி23 தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் … Read more

பதவிக்காக நிலைப்பாட்டை மாறுவதே நிதிஷ்குமாரின் கொள்கை: அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு

பாட்னா: பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையினால் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்திவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் லாலுவுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த பின்னர் முதல்முறையாக அமித்ஷா பீகாரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறுனியா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா; சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக தொகுதிகளில் வென்ற … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 4,912 பேருக்கு கொரோனா… 38 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 4,912 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,63,337ஆக உயர்ந்தது. * புதிதாக 38 பேர் … Read more