'பிரதமர் ஆவதற்காக பாஜகவுக்கு துரோகம்' – நிதிஷ் குமாரை வெளுத்து வாங்கிய அமித் ஷா!

“பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக, பாஜகவுக்கு நிதிஷ் குமார் துரோகம் செய்துள்ளார்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், அக்கூட்டணியை, கடந்த மாதம் முறித்துக் கொண்டார். பிறகு, பழையக் கூட்டணி கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பீகார் மாநில முதலமைச்சராக, … Read more

16-வது ஐபிஎல் டிசம்பரில் மினி ஏலம் நடத்த பிசிசிஐ தகவல்

மும்பை: 16-வது ஐபிஎல் டிசம்பரில் மினி ஏலம் நடத்த பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ம் தேதி நடத்த @BCCI திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணியும் தலா ரூ. 95 கோடி வரை செலவிடலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிக்கெட் வாங்க வந்த இளம்பெண் கூட்ட நெரிசலில் பலி!!

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஜிம்கானா மைதானத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் டிக்கெட் வாங்க ஒருவரையொருவர் அடித்து முந்தி அடித்துக்கொண்டு சென்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் … Read more

கர்நாடகா ஷிமோகாவில் கைது செய்யப்பட்ட 2 ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர்: காவல்துறை ஆணையர் தகவல்

பெங்களூரு: கர்நாடகா ஷிமோகாவில் கைது செய்யப்பட்ட 2 ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்து வெடிக்க வைத்து சோதனை செய்துள்ளனர் என ஷிமோகாவில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் லட்சுமி பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார். மாஸ் முனீர் சையத் யாசின் ஆகியோர் வெடிகுண்டு தயாரிக்க தேவையான சாதனங்களை அமேசான் மூலம் வாங்கியுள்ளனர். வெடிகுண்டு பரிசோதனை வெற்றிபெற்றதாகவும், அதை தேசிய கொடியை எரித்து கொண்டாடியதாகவும் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு புதிய கட்டுப்பாடு

உலகம் முழுவதும் மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ் அப், ஸூம், கூகுள் டுவோ, ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பலரும் வீடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த செயலிகள் பலர் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் காரணமாக சாதாரணமாக தொலைப்பேசி அழைப்பு பயன்பாடு ஒரு சில நேரங்களில் குறைந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா, … Read more

வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு புதிய கட்டுப்பாடு

உலகம் முழுவதும் மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் வாட்ஸ் அப், ஸூம், கூகுள் டுவோ, ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பலரும் வீடியோ கால் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் அந்த செயலிகள் பலர் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் காரணமாக சாதாரணமாக தொலைப்பேசி அழைப்பு பயன்பாடு ஒரு சில நேரங்களில் குறைந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைத்தொடர்பு மசோதா-2022-ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா, … Read more

பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

சித்தூர்: பாலாற்றின் குறுக்கே உள்ள அணையில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பேச்சால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீர்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க ரூ.120 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

காங்கிரஸுக்கு புதிய தலைவர்: ராகுல் காந்தி வாய்ஸ் இனி எடுபடுமா?

கட்சி என்றால் கோஷ்டி மோதல் உருவாவது இயல்பு தான் என்றாலும் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் எப்போதும் ஒரு படி மேல்தான். மாநில அளவில் என்றாலும், தேசிய அளவில் என்றாலும் இதுதான் நிலைமை. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட கட்சி என்பதால் இதை தவிர்க்க முடியாது என்றும் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். நாட்டை அதிகமுறை ஆண்ட கட்சி தற்போது தங்களது தலைவரை தேர்ந்தெடுக்க திணறி வருகிறது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வரும் நிலையில் உடல்நிலை … Read more

மணிப்பூரில் காலை 10:02 மணியளவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு

இம்பால்: மணிப்பூர் மாநிலம் மொய்ராங் நகரில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் காலை 10:02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 110கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்த நிலையில் அண்மையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்த பிறகு இன்று கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மிக … Read more